பொது செய்தி

தமிழ்நாடு

மங்களூர் சேர்மன் பதவியை தி.மு.க., கைப்பற்றியது

Added : நவ 11, 2021
Share
Advertisement
சிறுபாக்கம்--மங்களூர் ஒன்றிய சேர்மனாக தி.மு.க.,வின் சுகுணா சங்கர், துணைச் சேர்மனாக கலைச்செல்வி வெற்றி பெற்றனர்.மங்களூர் ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 24 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். ஒன்றிய சேர்மன் பதவிக்கான தேர்தலில் தி.மு.க., சார்பில் சுகுணா சங்கர், அ.தி.மு.க.,வில் மலர்விழி இளங்கோவன் களத்தில் இருந்தனர். சேர்மன் பதவியை கைப்பற்ற 13 கவுன்சிலர்கள் தேவை என்பதால்

சிறுபாக்கம்--மங்களூர் ஒன்றிய சேர்மனாக தி.மு.க.,வின் சுகுணா சங்கர், துணைச் சேர்மனாக கலைச்செல்வி வெற்றி பெற்றனர்.மங்களூர் ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 24 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். ஒன்றிய சேர்மன் பதவிக்கான தேர்தலில் தி.மு.க., சார்பில் சுகுணா சங்கர், அ.தி.மு.க.,வில் மலர்விழி இளங்கோவன் களத்தில் இருந்தனர். சேர்மன் பதவியை கைப்பற்ற 13 கவுன்சிலர்கள் தேவை என்பதால் கடும் போட்டி நிலவியது.கடந்தாண்டு சேர்மன் பதவிக்கான ஓட்டுப்பதிவில், தி.மு.க., அ.தி.மு.க., பெற்ற ஓட்டுக்கள் சமமானது. அப்போது, குலுக்கல் முறையில் சேர்மன் தேர்வை ஏற்காததால், மறு தேதி அறிவிப்பின்றி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், மங்களூர் ஒன்றிய சேர்மன் பதவிக்கான தேர்தல், கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், பி.டி.ஓ.,க்கள் சண்முக சிகாமணி, தண்டபாணி முன்னிலையில் மறைமுக தேர்தல் நேற்று நடந்தது.அதில், தி.மு.க., 13 ஓட்டுகளும், அ.தி.மு.க., 11 ஓட்டுகளும் பெற்றதால், தி.மு.க.,வின் சுகுணா சங்கர் சேர்மனாக வெற்றி பெற்றார்.துணைச் சேர்மனாக கலைச்செல்வி தேர்வு செய்யப்பட்டார். அவர்களுக்கு, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலரும், அமைச்சருமான கணேசன், மங்களூர் தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், அமிர்தலிங்கம், தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X