தொற்று நோய் பரவும் அபாயம்

Added : நவ 11, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக துப்புரவு பணி நடைபெறாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் துாரல் மழையும் பெய்து வருகிறது. கடலுார் மாநகராட்சி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 7 செ.மீ., மழை பதிவானது.தொடர் மழை காரணமாக ஆங்காங்கே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக துப்புரவு பணி நடைபெறாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் துாரல் மழையும் பெய்து வருகிறது. கடலுார் மாநகராட்சி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 7 செ.மீ., மழை பதிவானது.தொடர் மழை காரணமாக ஆங்காங்கே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. அதேப் போல் கிராமப் பகுதிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் செய்து வந்த துாய்மைப்பணியும் நடைபெறவில்லை. இதனால் குப்பைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் சாலையில் கலந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு, ஈக்கள் கூட்டம் பரவி வருகிறது. ஏற்கனவே டெங்கு காய்ச்சல், கொரோனா என பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த சுகாதார சீர்கேட்டினால் மேலும் பல தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X