தமிழ்நாடு

கடலூர் மாவட்டத்தில் ஆறுகளில் வெள்ளம்..கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை

Updated : நவ 11, 2021 | Added : நவ 11, 2021
Share
Advertisement
கடலுார் மாவட்டத்தின் வழியாக ஓடும் கொள்ளிடம், தென்பெண்ணை, கெடிலம், மணிமுக்தாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.வடக்கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த ஐந்து நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதன் காரணமாக

கடலுார் மாவட்டத்தின் வழியாக ஓடும் கொள்ளிடம், தென்பெண்ணை, கெடிலம், மணிமுக்தாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



latest tamil news


வடக்கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த ஐந்து நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கொம்பு அணையில் இருந்து நேரடியாக கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.கல்லணையில் இருந்தும் கீழணைக்கு கொள்ளிடத்தில் 5 ஆயிரம் கன அடி திறந்துவிடப்படுகிறது. கீழணையில் நீர் மட்டம் 7 அடியாக உள்ள நிலையில் கீழ் கொள்ளிடம் ஆற்றில் 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து வெளியேற்றப்படுகிறது.

கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொள்ளிடக் கரையோரம் உள்ள கஞ்சங்கொல்லை, சிறுகாட்டூர், எய்யலுார், முட்டம், கருப்பேரி, புளியங்குடி, அரசுர், வெள்ளூர், பருத்திக்குடி, நளன்புத்துார், காட்டூர், கவரப்பட்டு, வீரன்கோவில் திட்டு, கொடியம்பாளையம் உள்ளிட்ட 47 கிராமங்களுக்கு வருவாய்த் துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., அணை ஆகியவற்றில் இருந்து பெருக்கெடுத்துள்ள வெள்ளம் சாத்தனுார் அணைக்கு செல்லாமல் நேரடியாக தென் பெண்ணையில் 7 ஆயிரத்து 500 கனஅடி வந்து கொண்டிருக்கிறது.நேற்று தொடர்ந்து பெய்த கன மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோர கிராமங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


latest tamil news


கொடிலம் ஆற்றில் 8 ஆயிரம் கன அடி வெள்ளம் இரு கரை தொட்டு செல்கிறது. தண்ணீர் விரைவாக கடலில் சென்று வடிய முகத்துவாரம் ஆழமாக தோண்டப்பட்டது. சேத்தியாதோப்பு வெள்ளாற்றில் 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.விருத்தாசலம் பகுதியில் உள்ள பரவலுார், தையல்குணாம்பட்டினம், பெருமாள் ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X