பொது செய்தி

தமிழ்நாடு

மறுகால் பாயும் நாட்டார் கண்மாய்

Added : நவ 11, 2021
Share
Advertisement
காரைக்குடி : வடகிழக்கு பருவ மழையால் காரைக்குடி அருகே செஞ்சை நாட்டார் கண்மாய் மறுகால் பாய்ந்து ஓடுகிறது.இக்கண்மாய் 120 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 350 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாயில் உள்ள 5 மதகுகள் மூலம் விவசாய பகுதிக்கு பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாய்க்கு கோவிலுார், பாதரக்குடி, பேயன்பட்டி, ஓ.சிறுவயல் பகுதி மேய்ச்சல் நிலங்களில் சேகரமாகும் மழை நீர்
 மறுகால் பாயும் நாட்டார் கண்மாய்

காரைக்குடி : வடகிழக்கு பருவ மழையால் காரைக்குடி அருகே செஞ்சை நாட்டார் கண்மாய் மறுகால் பாய்ந்து ஓடுகிறது.இக்கண்மாய் 120 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

350 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாயில் உள்ள 5 மதகுகள் மூலம் விவசாய பகுதிக்கு பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாய்க்கு கோவிலுார், பாதரக்குடி, பேயன்பட்டி, ஓ.சிறுவயல் பகுதி மேய்ச்சல் நிலங்களில் சேகரமாகும் மழை நீர் பெருக்கெடுத்து கண்மாயை நிரப்பும். தற்போது வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாட்டார் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

இக்கண்மாய் பாசன வசதி பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கண்மாயில் நீர் தேங்குவதின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என தெரிவித்தனர். இக்கண்மாய் துார்வாராததால் ஆகாயதாமரை வளர்ந்தும், சாக்கடை கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இக்கண்மாயை துார்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X