அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அ.தி.மு.க.,வில் உரிமை கோர சசிகலாவுக்கு முகாந்திரமில்லை'

Updated : நவ 11, 2021 | Added : நவ 11, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை : 'அ.தி.மு.க.,வில் உரிமை கோர, சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை' என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தரப்பில், சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என, 2017ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து சசிகலா தரப்பில்
ADMK, Sasikala, OPS

சென்னை : 'அ.தி.மு.க.,வில் உரிமை கோர, சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை' என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தரப்பில், சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என, 2017ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜே.ஸ்ரீதேவி முன் நடந்து வருகிறது; நேற்று விசாரணைக்கு வந்த போது, பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணனும்; திண்டுக்கல் சீனிவாசன் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத்தும் வாதாடியதாவது: சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியதை, உச்ச நீதிமன்றமும், டில்லி உயர்நீதிமன்றமும், தேர்தல் கமிஷனும் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில், தான் அ.தி.மு.க., பொதுச்செயலர் என்ற தவறான தகவலை, நீதிமன்றத்தில் சசிகலா தெரிவிக்கிறார்.


latest tamil news


கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்றதோடு, இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. அவர்கள் தான் உண்மையான அ.தி.மு.க., என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வில் சசிகலா இல்லை என்கிற போது, கட்சி உறுப்பினர்கள் விபரம், சொத்து, வைப்பு நிதி, தலைமை அலுவலகத்தின் சாவி ஆகியவற்றை தன்னிடம் ஒப்படைக்கும்படி அவர் கோருவது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அ.தி.மு.க.,வில் உரிமை கோர, அவருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

அ.தி.மு.க., தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், சசிகலா தரப்பில் வாதங்களை முன் வைப்பதற்காக, வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
11-நவ-202118:49:26 IST Report Abuse
Narayanan பன்னீர்செல்வம் ஒரே நிலையில் இருக்கவேண்டும் . அப்போதுதான் அதிமுகவை நடத்திச்செல்லமுடியும் . மீதும் பொதுக்குழுவை கூட்டி ஓற்றை தலைமையை கொண்டுவந்து முடிவெடுக்க வேண்டும் . எதிர்க்கட்சி அந்தஸ்தை உணர்ந்து ஆளும்கட்சிக்கு அவ்வப்போது பிரச்சனைகளை கொண்டுசென்று மக்களின் மனத்தில் மீண்டும் அமரவேண்டும் .
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
11-நவ-202118:04:48 IST Report Abuse
sridhar போங்கப்பா போர் அடிக்குது வேற ஏதாவது இருந்த சொல்லுங்க அந்த அம்மையார் தான் இல்லேன்னு சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியதை, உச்ச நீதிமன்றமும், டில்லி உயர்நீதிமன்றமும், தேர்தல் கமிஷனும் ஏற்றுக் கொண்டுள்ளன. அப்புறம் எதுக்கு இந்த கேஸ் தள்ளுபடி பண்ண வேண்டியது தானே
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
11-நவ-202116:12:25 IST Report Abuse
Vena Suna யாரிடமோ வாங்கி கொண்டு அதிமுகவை ஒழிக்க தான் இந்த அம்மையார் இப்போ கிளம்பி இருக்கிறார். அவருக்கோ அரசியலில் எதிர்காலம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X