மழைநீரை சேமியுங்கள் சேமியுங்கள்; ஊராட்சிகளுக்கு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீரை சேமியுங்கள் சேமியுங்கள்; ஊராட்சிகளுக்கு உத்தரவு

Added : நவ 11, 2021
Share
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் மழைநீரை சேமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திண்டுக்கல்லில் 306 ஊராட்சிகளிலும் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளிகளில் மழைநீரை சேகரிப்பு மையம் அமைக்க ஏற்பாடுகள்


வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் மழைநீரை சேமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திண்டுக்கல்லில் 306 ஊராட்சிகளிலும் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளிகளில் மழைநீரை சேகரிப்பு மையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.அதற்காக ஊராட்சிகளில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் எவ்வளவு உள்ளன என கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.அவற்றைச் சுற்றி 4 அடி ஆழத்திற்கு குழி தோண்டி, அதில் கற்களை நிரப்பி அதன் வழியாக மழைநீர், ஆழ்துளை கிணற்றுக்குள் செல்ல வழிவகை செய்ய உள்ளனர். மேலும் கிராமப்புறங்களில் தாழ்வான பகுதிகள் எவை எனக் கண்டறிந்து மழைநீர் தேங்கி நிற்கும் வகையில் பண்ணை குட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பண்ணைக் குட்டைகள் நுாறு நாள் பணியாளர்கள் மூலம் இலவசமாக அமைத்து கொடுக்கப்படுகிறது. இதற்காக தற்போது வரை 1,200 பேர் விண்ணப்பித்துள்ளனர்.திட்ட இயக்குனர் தினேஷ்குமார் கூறுகையில்,''ஆர்வமுடன் பலர் பண்ணை குட்டை அமைக்க விண்ணப்பித்துள்ளனர்.

இது தவிர, வீடுகள், வணிக நிறுவனங்கள் மொட்டை மாடியில் விழும் மழைநீரை சேகரித்து மீண்டும் பயன்படுத்தும் திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X