பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு துறை டி.ஜி.பி., முதல்வர் தொகுதியில் ஆய்வு

Added : நவ 11, 2021
Share
Advertisement
கொளத்துார்--முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்துாரில், மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட, தீயணைப்பு துறை டி.ஜி.பி., கரண் சின்ஹா, தேங்கிய நீரை விரைவாக அகற்ற, மீட்பு பணிகளை முடுக்கி விட்டார்.சென்னையில் பெய்து வரும் தொடர் கன மழையால், முதல்வரின் கொளத்துார் தொகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான சாலை முதல் அனைத்து சாலைகளிலும், தேங்கிய மழை நீர் வடியாமல் உள்ளது. இதனால்,

கொளத்துார்--முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்துாரில், மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட, தீயணைப்பு துறை டி.ஜி.பி., கரண் சின்ஹா, தேங்கிய நீரை விரைவாக அகற்ற, மீட்பு பணிகளை முடுக்கி விட்டார்.சென்னையில் பெய்து வரும் தொடர் கன மழையால், முதல்வரின் கொளத்துார் தொகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான சாலை முதல் அனைத்து சாலைகளிலும், தேங்கிய மழை நீர் வடியாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகளில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டாலும், நேற்று நீடித்த மழை காரணமாக நிலைமை மேலும் மோசமானது. கொளத்துார் ஜவஹர் நகர், பெரியார் நகர் அங்குள்ள அரசு பொது மருத்துவமனை ஆகியவை மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த நிலையில், தீயணைப்பு துறை இயக்குனர் கரண் சின்ஹா, நேற்று காலை கொளத்துார் தொகுதியில் மழை வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து, நேரில் ஆய்வு செய்தார். தேங்கிய மழை நீரை அகற்றவும், மீட்பு பணியை விரைவு படுத்தவும், வீடுகளில் முடங்கிய மக்களுக்கு, அவசர உதவிகளை செய்யவும், துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X