சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீண்டும் உள்வாங்கியது சாலை பள்ளத்தில் சிக்கிய வேன் மீட்பு

Added : நவ 11, 2021
Share
Advertisement
நெசப்பாக்கம்-எம்.ஜி.ஆர்., நகர்- அண்ணா பிரதான சாலையில் மீண்டும் ஏற்பட்ட பள்ளத்தில், வேன் ஒன்று சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர்., நகரில் அண்ணா பிரதான சாலை உள்ளது. இது கே.கே.நகர் மற்றும் அசோக் நகரை இணைக்கும் பிரதான சாலையாகும்.இச்சாலை வழியாக, நெசப்பாக்கம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவு நீர் செல்கிறது.

நெசப்பாக்கம்-எம்.ஜி.ஆர்., நகர்- அண்ணா பிரதான சாலையில் மீண்டும் ஏற்பட்ட பள்ளத்தில், வேன் ஒன்று சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர்., நகரில் அண்ணா பிரதான சாலை உள்ளது. இது கே.கே.நகர் மற்றும் அசோக் நகரை இணைக்கும் பிரதான சாலையாகும்.இச்சாலை வழியாக, நெசப்பாக்கம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவு நீர் செல்கிறது. இந்த கழிவு நீர் குழாயில் கசிவு ஏற்பட்டு அடிக்கடி பெரிய அளவில் பள்ளங்கள் விழுந்தன.இதற்கு நிரந்தர தீர்வு காண, 2.20 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுப் பாதையில் இன்னொரு குழாய் அமைக்க குடிநீர் வாரியம் முடிவு செய்து, பணிகள் நடந்து வருகின்றன.அண்ணா பிரதான சாலையில், குப்பை சேகரிக்கும் பேட்டரி ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில், அக்., 4ம் தேதி திடீரென பள்ளம் ஏற்பட்டது.பள்ளத்தை குடிநீர் வாரிய அதிகாரிகள் சீரமைத்தனர். நவ., 3ம் தேதி அண்ணா பிரதான சாலை, நெசப்பாக்கம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் எதிரே, மீண்டும் சாலை உள்வாங்கியது.இப்பள்ளத்தையும் குடிநீர் வாரிய அதிகாரிகள் சீர் செய்தனர். இந்நிலையில், அண்ணா பிரதான சாலையில், மாநகராட்சி குப்பை அகற்றும் பேட்டரி ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில், நேற்று முன்தினம் இரவு திடீரென சாலை உள்வாங்கியது.இதில், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் டிராவல்ஸ் வேன் ஒன்று பள்ளத்தில் சிக்கியது. கிரேன் உதவியுடன் வேன் மீட்கப்பட்டது.அண்ணா சாலையில் பள்ளம் விழும் நிகழ்வு தொடர் கதையாக உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X