தமிழ்நாடு

கோரிக்கை கண்டுகொள்ளாத அதிகாரிகள்; வெள்ளத்தில் தத்தளிக்கும் செம்மஞ்சேரி

Added : நவ 11, 2021
Share
Advertisement
சோழிங்கநல்லுார்-சென்னை புறநகரில், 40க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வடியும் உபரி நீர், பகிங்ஹாம் கால்வாயை அடைய, செம்மஞ்சேரி, துரைப்பாக்கம் பகுதியில் முறையான நீரோட்ட பாதை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அப்பகுதியில் தற்போது வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்யும்
 கோரிக்கை கண்டுகொள்ளாத அதிகாரிகள்;  வெள்ளத்தில் தத்தளிக்கும் செம்மஞ்சேரி

சோழிங்கநல்லுார்-சென்னை புறநகரில், 40க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வடியும் உபரி நீர், பகிங்ஹாம் கால்வாயை அடைய, செம்மஞ்சேரி, துரைப்பாக்கம் பகுதியில் முறையான நீரோட்ட பாதை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அப்பகுதியில் தற்போது வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்யும் கனமழையால், ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. குறிப்பாக, தாம்பரம், சேலையூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், பல்லாவரம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, ஆதம்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள, 40க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின.இந்த ஏரி உபரி நீர், சோழிங்கநல்லுார் மண்டலத்திற்கு உட்பட்ட, செம்மஞ்சேரி, துரைப்பாக்கம் வழியாக பகிங்ஹாம் கால்வாய்க்கு செல்கிறது. இதனால், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம் பகுதியில், வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது.முந்தைய ஆண்டுகளில் பாதிப்பு அதிகமுள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு, எட்டடுக்கு குடியிருப்பு பகுதியில் வெள்ள பாதிப்பு பெரிய அளவில் இல்லை.ஆனால், ஜவஹர் நகர், எழில்முக நகர் பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால், இங்குள்ள 400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்த பகுதி, செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்ட எல்லையில் உள்ளது.இரு மாவட்ட நிர்வாகமும் இணைந்து, மண் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், நீர்வழி பாதை அமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே மண்டலம், 194வது வார்டு, துரைப்பாக்கம், குமரன்குடில் நகரில், 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. பகிங்ஹாம் கால்வாயை ஒட்டிய இந்த பகுதியில், முறையான நீர்வழித்தடம் இல்லாததால், தெருக்களில் மழை நீர் தேங்குகிறது. நீரோட்டம் பார்த்து வடிகால் கட்ட, நான்கு ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X