பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவருக்கு 'ரண ஜன்னி' தடுப்பூசி

Added : நவ 11, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'தொண்டை அடைப்பான், ரண ஜன்னி வராமல் தடுக்க' திண்டுக்கல்லில் 5 முதல் 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.கொரோனா தொற்று பெருமளவு குறைந்து வருவதால் செப்.1 முதல் 9-12 ம் வகுப்புகளுக்கும், நவ.1 முதல் 1-8 ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர்.தற்போது மழைக்காலம் என்பதால்

திண்டுக்கல் : 'தொண்டை அடைப்பான், ரண ஜன்னி வராமல் தடுக்க' திண்டுக்கல்லில் 5 முதல் 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

கொரோனா தொற்று பெருமளவு குறைந்து வருவதால் செப்.1 முதல் 9-12 ம் வகுப்புகளுக்கும், நவ.1 முதல் 1-8 ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர்.தற்போது மழைக்காலம் என்பதால் மாணவர்களுக்கு தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி உள்ளிட்டவை வராமல் தடுக்க தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக வகுப்பு வாரியாக மாணவர்களின் விபரம் சேகரிக்கும் பணி நடக்கிறது. சுழற்சி முறையில் ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X