சில வரி செய்திகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : நவ 11, 2021
Share
திருக்கல்யாணம்போளிவாக்கம்: கடம்பத்துார் ஒன்றியம், போளிவாக்கம் ஊராட்சியில் உள்ள சண்முக நாயகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு எட்டாம் ஆண்டு திருக்கல்யாணம் நேற்று நடந்தது. கோவிலில், காலை 9:30 மணிக்கு, சண்முக நாயகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலை 5:00 மணிக்ககு சுவாமி வீதியுலா நடந்தது.இதேபோல், மணவாள நகர் மங்கள ஈஸ்வரி உடனுறை மங்கள ஈஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி

திருக்கல்யாணம்போளிவாக்கம்: கடம்பத்துார் ஒன்றியம், போளிவாக்கம் ஊராட்சியில் உள்ள சண்முக நாயகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு எட்டாம் ஆண்டு திருக்கல்யாணம் நேற்று நடந்தது. கோவிலில், காலை 9:30 மணிக்கு, சண்முக நாயகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலை 5:00 மணிக்ககு சுவாமி வீதியுலா நடந்தது.இதேபோல், மணவாள நகர் மங்கள ஈஸ்வரி உடனுறை மங்கள ஈஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி திருவிழா நடந்தது. இதில் மங்கள சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம், நேற்று, காலை 10:30 மணிக்கு நடந்தது.கண்காணிப்பு தீவிரம்ஆர்.கே.பேட்டை: ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய கிராமத்தில் போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் நேற்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.ஆர்.கே.பேட்டை அடுத்த, ராஜாநகரம் கிராமத்தின் வழியாக, ஆந்திர மாநிலம், பாலசமுத்திரம் பகுதிக்கு, மலைப்பாதை உள்ளது. இந்த வழியாக, ரேஷன் அரிசி, சாராயம் மற்றும் கனிமவளம் அவ்வப்போது கடத்தப்படுகிறது.இந்நிலையில், நேற்று ஆர்.கே.பேட்டை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். கண்காணிப்பிற்கான காரணம் வெளியாகவில்லை. இது வழக்கமான கண்காணிப்பு தான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.உத்திரமேரூர் ஏரியில் ஆய்வுஉத்திரமேரூர்: செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால், உத்திரமேரூர் ஏரியின் முழு உயரமான, 20 அடியும் நிரம்பி, மூன்று கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.இந்நிலையில், உத்திரமேரூர் ஏரியின் நரிமடை திறக்கப்பட்டு வினாடிக்கு, 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.உத்திரமேரூர் ஏரியை டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும், காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சுப்ரமணியன், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஏரியின் மொத்த கொள்ளளவு, ஏரிக்கு வரும் மழை நீரின் அளவு, வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறித்து, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கந்த சஷ்டி உற்சவம் நிறைவுதிருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மஹா கந்த சஷ்டி விழா 4ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது. பிரதான விழாவான சூரசம்ஹார வைபவம், நேற்று முன்தினம் நடந்தது.நேற்று இரவு 7:25 மணிக்கு, கோவில் உற்சவ மண்டபத்தில், கந்தசுவாமி பெருமான் தெய்வானையை மணம் முடிக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடந்ததை தொடர்ந்து, சஷ்டி விழா நிறைவடைந்தது.10.11.2021 / கடம்பத்துார் / தி.நடராஜசிவா / 7904308590/ கீ: 899 / 3:00எடிட் : விஜயராகவன்திருக்கல்யாணம்போளிவாக்கம்: கடம்பத்துார் ஒன்றியம், போளிவாக்கம் ஊராட்சியில் உள்ள சண்முக நாயகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு எட்டாம் ஆண்டு திருக்கல்யாணம் நேற்று நடந்தது. கோவிலில், காலை 9:30 மணிக்கு, சண்முக நாயகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலை 5:00 மணிக்ககு சுவாமி வீதியுலா நடந்தது.இதேபோல், மணவாள நகர் மங்கள ஈஸ்வரி உடனுறை மங்கள ஈஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி திருவிழா நடந்தது. இதில் கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள மங்கள சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம், நேற்று, காலை 10:30 மணிக்கு நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X