பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் கனமழையால் நிரம்பிய நீர்நிலைகள்: 23 குளங்களில் 100 சதவீதம் நீர் இருப்பு

Updated : நவ 11, 2021 | Added : நவ 11, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோவை: கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால், நொய்யல் வழித்தடத்தில் அமைந்துள்ள, 23 குளங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.கோவை மாவட்டத்தில் அக்., துவக்கம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. நொய்யலில் பெருக்கெடுத்த வெள்ளத்தை, பொதுப்பணித்துறையினர் குளங்களுக்கு பிரித்து அனுப்பி வருகின்றனர். நொய்யல் வழித்தடத்தில் அமைந்துள்ள உக்குளம், புதுக்குளம், கோளரம்பதி, நரசாம்பதி,
rain, Coimbatore, குளங்கள்

கோவை: கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால், நொய்யல் வழித்தடத்தில் அமைந்துள்ள, 23 குளங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

கோவை மாவட்டத்தில் அக்., துவக்கம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. நொய்யலில் பெருக்கெடுத்த வெள்ளத்தை, பொதுப்பணித்துறையினர் குளங்களுக்கு பிரித்து அனுப்பி வருகின்றனர். நொய்யல் வழித்தடத்தில் அமைந்துள்ள உக்குளம், புதுக்குளம், கோளரம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, குமாரசாமி, செல்வ சிந்தாமணி, கங்கநாராயண சமுத்திரம், செங்குளம், கோவை பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி, வெள்ளலுார், செம்மாண்டாம்பாளையம் உட்பட, 23 குளங்கள் 100 சதவீதம் நிரம்பி விட்டன.

நீலம்பூர் குளம், பேரூர் பெரிய குளம் ஆகியவை 95 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளன. கோவைக்கு குடிநீர் அளிக்கும் சிறுவாணி அணையின் மொத்த உயரம் 49.53 அடி. இதில் 44.65 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. அணை நீர் மட்டம் உயராமல் தடுக்க, அணைக்கு வரும் மழைநீரை கேரள பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர்.


latest tamil news



நேற்றைய நிலவரப்படி அணை மதகு 10 செ.மீ., உயரத்துக்கு உயர்த்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பில்லுார் அணையின் மொத்த உயரம் 100 அடி. இதில் நேற்றைய நிலவரப்படி, 90 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் அக்.,1 முதல் நேற்று வரை 476 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இது, இந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்யும் மழையை காட்டிலும், 106 சதவீதம் அதிகம்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CBE CTZN - Coimbatore,இந்தியா
11-நவ-202109:50:27 IST Report Abuse
CBE CTZN " 23 குளங்கள் 100 சதவீதம் நிரம்பி விட்டன" - இல்லை . " 23 குளங்கள் 100 சதவீதம் கோவைமாநகர் சாக்கடை நீரால் நிரம்பி விட்டன" - பொதுப்பணித்துறை தூங்குவதாலும், மாநகராட்சி அக்கறைஇன்மையாலும்.
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
11-நவ-202109:24:52 IST Report Abuse
தமிழன் கோவை அரசியல்வாதிகள் கவனத்திற்கு... இன்னும் 23 குளங்கள் இருக்காம். அடுத்த தபா இதே மாதிரி மழை செய்தி வர்றப்போ இந்த எண்ணிக்கைல பத்தாவது கொறஞ்சுருக்கணும். - தமிழக அரசியல்வாதிகள் நல சங்கம்.
Rate this:
Cancel
Sounderrajan - Coimbatore ,இந்தியா
11-நவ-202108:08:46 IST Report Abuse
Sounderrajan நல்ல செய்தி. நல்ல செயல்பாடு. இதனால் நொய்யல் ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதில் ஐயமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X