பொது செய்தி

தமிழ்நாடு

செடி பராமரிப்பு மானியம்  விடுவிப்பு

Added : நவ 11, 2021
Share
Advertisement
வாலாஜாபாத்-செங்கல்பட்டு சமூக வனத்துறையில், வாலாஜாபாத், உத்திரமேரூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, மாம்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய வன சரகங்கள் உள்ளன.இவற்றில் இருக்கும் விவசாயிகளுக்கு, சந்தனம், குமிழ் உள்ளிட்ட பல மரங்களை வளர்க்க, ஒரு செடிக்கு 7 ரூபாய் வரை, வனத்துறை பராமரிப்பு மானியம் வழங்குகிறது.அதன்படி 2015 - 19ம் ஆண்டு என, நான்கு ஆண்டுகளாக செடிகளை நட்டு பராமரித்து வரும்

வாலாஜாபாத்-செங்கல்பட்டு சமூக வனத்துறையில், வாலாஜாபாத், உத்திரமேரூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, மாம்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய வன சரகங்கள் உள்ளன.இவற்றில் இருக்கும் விவசாயிகளுக்கு, சந்தனம், குமிழ் உள்ளிட்ட பல மரங்களை வளர்க்க, ஒரு செடிக்கு 7 ரூபாய் வரை, வனத்துறை பராமரிப்பு மானியம் வழங்குகிறது.அதன்படி 2015 - 19ம் ஆண்டு என, நான்கு ஆண்டுகளாக செடிகளை நட்டு பராமரித்து வரும் விவசாயிகளுக்கு, சமீபத்தில் செடி பராமரிப்பு மானியத்தை வனத்துறை விடுவித்துள்ளது.செங்கல்பட்டு சமூக வனத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:சொந்த நிலங்களில் செடிகள் வளர்க்கும் திட்டத்தில், 4 ஆண்டுகளாக பலவித செடிகளை நட்டு பராமரித்து வரும், 680 விவசாயிகளுக்கு, 25.76 லட்சம் ரூபாய் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X