சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாமண்டூர் பாலத்தில் தங்கியிருந்த நபர் மீட்பு

Added : நவ 11, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு--பாலாற்று பாலத்தின் கீழ் தங்கியிருந்தவரை, தீயணைப்பு வீரர்கள், நேற்று மீட்டனர்.மதுராந்தகம் அடுத்த கரிக்கிலி கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார், 49. இவர், மாமண்டூர் பாலாற்று பாலத்தில் தங்கி, சுற்று வட்டாரத்தில் பழைய பேப்பர் மற்றும் மதுபாட்டில்கள் சேகரித்து, காயலான் கடையில் விற்று வருகிறார்.நான்கு நாட்களாக பாலாற்றில் தண்ணீர் செல்வதால், பாலத்தின் கீழ்

செங்கல்பட்டு--பாலாற்று பாலத்தின் கீழ் தங்கியிருந்தவரை, தீயணைப்பு வீரர்கள், நேற்று மீட்டனர்.மதுராந்தகம் அடுத்த கரிக்கிலி கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார், 49. இவர், மாமண்டூர் பாலாற்று பாலத்தில் தங்கி, சுற்று வட்டாரத்தில் பழைய பேப்பர் மற்றும் மதுபாட்டில்கள் சேகரித்து, காயலான் கடையில் விற்று வருகிறார்.நான்கு நாட்களாக பாலாற்றில் தண்ணீர் செல்வதால், பாலத்தின் கீழ் தங்கியிருந்த இவரால் வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பாலாற்றில் தண்ணீர் செல்வதை பார்க்க, பொதுமக்கள் நேற்று சென்றனர். அவரை பார்த்தவுடன், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பாலாற்று பகுதிக்கு வந்தனர். கயிறு வைத்து, தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டனர். சொந்த ஊரான கரிக்கிலி கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் கூறியதாவது:நான்கு நாட்களாக மழை பெய்தாலும், பாலத்தின் கீழ் உயரமான இடத்தில் தங்கியுள்ளார். வாங்கி வைத்திருந்த பிஸ்கட், பிரட் உள்ளிட்டவற்றை சாப்பிட்டுள்ளார். பொதுமக்கள் தகவலையடுத்து, அவரை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X