சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புறம் போக்கு நிலம் மீட்பு

Added : நவ 11, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-ஸ்ரீபெரும்புதுார் அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த குட்டை புறம்போக்கு நிலத்தை, வருவாய் துறையினர் நேற்று மீட்டனர். அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை தொடரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான அரசு நிலங்கள், வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் குறித்து, சமீபத்தில்

காஞ்சிபுரம்-ஸ்ரீபெரும்புதுார் அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த குட்டை புறம்போக்கு நிலத்தை, வருவாய் துறையினர் நேற்று மீட்டனர். அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை தொடரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான அரசு நிலங்கள், வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் குறித்து, சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் அதிகளவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் இருப்பது கண்டறிப்பட்டது.இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான வருவாய் துறையினர், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, சேந்தமங்கலம் கிராமத்தில், 2.5 ஏக்கர் ஆக்கிரமிப்பில் இருந்த குட்டை புறம்போக்கு நிலத்தை, நேற்று மீட்டனர்.சந்தவேலுார் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து, இந்த நிலத்தை மீட்டுள்ளதாக கூறிய வருவாய் துறையினர், 'மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 25 கோடி ரூபாய்' என்றனர்.மேலும், 'தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே, பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இந்த இடம், குட்டையாக இருந்துள்ளது. அவற்றை மூடி, ஆக்கிரமிப்பாளர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர்' என்றனர்.ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து வருவாய் துறையினர் கூறியதாவது:ஆக்கிரமிப்பாளர்கள், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே பல ஏக்கர் அரசு நிலங்களை மடக்கி ஆக்கிரமித்துள்ளனர். அதில் ஓரிடத்தை இன்று - நேற்று - மீட்டுள்ளோம்.அடுத்ததாக, காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் செயல்படும் தாபா ஓட்டல் ஆக்கிரமிப்பு குறித்து விசாரித்து வருகிறோம். நீர்நிலையில் உள்ள ஓட்டலை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமல்லாமல், காஞ்சிபுரம் நகராட்சியிலும் ஏராளமான ஆக்கிரமிப்பு நிலங்கள் உள்ளன.காஞ்சிபுரம் சங்குசாபேட்டை தெருவில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதுகுறித்தும் பல்வேறு புகார்கள் வருகின்றன. அவற்றை மீட்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. ஆக்கிரமிப்பு நிலங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன. சேந்தமங்கலத்தில் மீட்கப்பட்டது குளமாக இருந்த பகுதி. மீண்டும் அதை குளமாக மாற்ற, நடவடிக்கை எடுக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X