பொது செய்தி

இந்தியா

இரண்டாவது அலை கட்டுக்குள் வந்ததால், கர்நாடகா உட்பட நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் தளர்வு

Added : நவ 11, 2021
Share
Advertisement
பெங்களூரு-கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்ததால், கர்நாடகா உட்பட நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் தளர்த்தபட்டுள்ளது. ஆனால், கொரோனா விதிமுறை விஷயத்தில் கர்நாடக அரசு நாளுக்கொரு விதிமுறை வெளியிடுவது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்ததால், கர்நாடகாவில் விதிக்கப்பட்டிருந்த இரவு ஊரடங்கை அரசு திரும்பப்பெற்றது.

பெங்களூரு-கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்ததால், கர்நாடகா உட்பட நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் தளர்த்தபட்டுள்ளது. ஆனால், கொரோனா விதிமுறை விஷயத்தில் கர்நாடக அரசு நாளுக்கொரு விதிமுறை வெளியிடுவது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்ததால், கர்நாடகாவில் விதிக்கப்பட்டிருந்த இரவு ஊரடங்கை அரசு திரும்பப்பெற்றது. திரையங்குகள், பார் அண்ட் ரெஸ்டாரென்ட், பள்ளி, கல்லுாரிகள் என அனைத்தும் துவங்கப்பட்டுள்ளது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.ஆனால், மஹாராஷ்டிராவிலிருந்து கர்நாடகாவுக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனை அறிக்கையை கட்டாயமாக்கி அரசு புதிதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.சில நாட்கள் மட்டும் கர்நாடகாவுக்கு வருவோரை தவிர, நீண்ட நாட்கள் தங்குவோர், நெகடிவ் அறிக்கை கொண்டு வருவது கட்டாயம். இதனால், பலரும் எரிச்சலும், கோபமும் அடைந்துள்ளனர்.கொரோனா கட்டுக்குள் வந்து அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் பரிசோதனை அறிக்கை கட்டாயம் என்ற அறிக்கை அவசியமில்லை.இந்நிலையில், குறுகிய கால, நீண்ட கால என, இரண்டு விதமான உத்தரவு பிறப்பித்தது நகைப்புக்குரியதாக உள்ளது.கொரோனா தொற்று ஏற்பட்ட நபர், சில நாட்கள் தங்கி சென்றாலும் அல்லது நீண்ட நாட்கள் இங்கேயே தங்கியிருந்தாலும் தொற்று பரவும்.இதை சரியாக உணராமல் அரசு தவறான முடிவுகளை எடுத்து, மக்களுக்கு தொந்தரவு கொடுப்பதாக பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X