பொது செய்தி

தமிழ்நாடு

காவலன் செயலி: டி.ஜி.பி., சைலேந்திர பாபு அறிவுரை

Updated : நவ 11, 2021 | Added : நவ 11, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : பெண்கள் அவசர காலங்களில் காவல் உதவிக்காக 'காவலன் எஸ்.ஓ.எஸ்.' செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.'பெண்கள் தனியாக ஆட்டோவிலோ கார்களிலோ பயணம் செய்யும் முன் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை 99697 77888 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். 'காவல்துறை அந்த வாகனத்தை ஜி.பி.ஆர்.எஸ். வாயிலாக கண்காணிக்கும். இந்த தகவலை அனைத்து தளங்களிலும்
Sylendra Babu, DGP, Kavalan SOS

சென்னை : பெண்கள் அவசர காலங்களில் காவல் உதவிக்காக 'காவலன் எஸ்.ஓ.எஸ்.' செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

'பெண்கள் தனியாக ஆட்டோவிலோ கார்களிலோ பயணம் செய்யும் முன் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை 99697 77888 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். 'காவல்துறை அந்த வாகனத்தை ஜி.பி.ஆர்.எஸ். வாயிலாக கண்காணிக்கும். இந்த தகவலை அனைத்து தளங்களிலும் பகிரவும்' என்ற தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற தகவல் தவறானது என டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


latest tamil news


அவர் கூறியதாவது: பெண்கள் அவசர காலங்களில் காவல் உதவிக்காக 'காவலன் எஸ்.ஓ.எஸ்.' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். இச்செயலியில் உள்ள எஸ்.ஓ.எஸ். பட்டனை அழுத்துவதன் வாயிலாக தங்களுடைய இருப்பிடம் ஜி.பி.ஆர்.எஸ். வாயிலாக அறியப்பட்டு உடனடி சேவை வழங்கப்படும். இச்செயலியில் உள்ள 'ஷேக் டிரிக்கர்' வசதியை பயன்படுத்தியும் காவல் துறையின் உதவியை பெற இயலும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-நவ-202116:01:15 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கரன்சியிலே ஜிபிஎஸ் சிப்ஸ் வெச்சிருக்காரு மோடின்னு சொல்லி புருடா விட்ட கூட்டம் தான் இதையும் போட்ருக்கும்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-நவ-202115:57:03 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆடீம்கா ஆட்டையைப் போட்டு போட்ட பல் சாலைகள் குண்டுங்குழியுமா இருக்கு. இந்த “ஷேக்” வசதியை ஆன் பண்ணா ரோட்டிலே போறப்பவே எஸ்ஓஎஸ் மெசேஜ் போயிடுமே
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
11-நவ-202115:49:51 IST Report Abuse
R.RAMACHANDRAN இந்த நாட்டில் காவலர்களே காமுகர்களாக இருக்கும் நிலையில் அவர்களை எப்படி பெண்கள் நம்ப முடியும்.
Rate this:
Hari - Chennai,இந்தியா
14-நவ-202114:32:33 IST Report Abuse
Hariஅருமையான கருத்து சார். இப்போது மக்களுக்கு மிக பெரிய ஆபத்து காவல் துறையால்தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X