பொது செய்தி

தமிழ்நாடு

இருளர் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., நிவாரணம்

Added : நவ 11, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம் அருகே தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இருளர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனம் அடுத்த சாரத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் கனமழையால் பாதிக்கப்பட்டனர். திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் நேற்று காலை சாரத்தில் உள்ள அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட

திண்டிவனம்-திண்டிவனம் அருகே தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இருளர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனம் அடுத்த சாரத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் கனமழையால் பாதிக்கப்பட்டனர். திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் நேற்று காலை சாரத்தில் உள்ள அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் ஒலக்கூர் பி.டி.ஓ.,க்கள் ஜானகி, சீத்தாலட்சுமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ராஜேந்திரன், மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் குட்டி, முன்னாள் ஊராட்சித் தலைவர் சத்தியகாமன், ஒலக்கூர் ஒன்றிய பாசறை காளிபிரதாப், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதேபோல் அன்னம்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 2 குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., நிவாரண பொருட்கள் மற்றும் தலா 3,000 ரூபாய் வழங்கினார். திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X