தமிழ்நாடு

தென்பெண்ணை ஆறு கரைப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க கலெக்டர் அறிவுறுத்தல்

Added : நவ 11, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-சாத்தனுார் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரமாக வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையில் நேற்று காலை 10:00 மணி நிலவரப்படி 97.45 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. கனமழை பெய்வதால் அணையின் நீர்மட்டம் வேகமாக

கள்ளக்குறிச்சி-சாத்தனுார் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரமாக வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையில் நேற்று காலை 10:00 மணி நிலவரப்படி 97.45 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. கனமழை பெய்வதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் 1,540 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் வெளியேற்றும் சூழல் இருப்பதால், தென்பெண்ணை ஆற்றின் இருபுறமும் உள்ள கிராமங்களான மூங்கில்துறைப்பட்டு, சீர்பாதநல்லுார், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, மேலந்தல், காங்கியனுார், ஜம்பை, ஜா.சித்தாமூர், மணலுார்பேட்டை, சாங்கியம், விளந்தை, கழுமரம், கோட்டகம் கூவனுார், மிலாரிப்பட்டு, தகடி, தொட்டி, டி.முடியனுார், கரடி, கீரனுார், திருக்கோவிலுார், ஆவியூர், வடக்கு நெமிலி, அண்ணாடமருதார், வடமருதுார், சுந்தரேசபுரம், பிள்ளையார்குப்பம், குலதீபமங்கலம் உட்பட கரையின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோமுகி மற்றும் மணிமுக்தா ஆற்றில் கரையின் இருபுறமும் உள்ள கிராமங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X