தமிழ்நாடு

ஆயத்தம்; நகர்புற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர்...ஆளுங்கட்சியில் 'சீட்' வாங்குவதில் போட்டா போட்டி

Added : நவ 11, 2021
Share
Advertisement
தியாகதுருகம்-நகர்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வரும் நிலையில் ஆளும் கட்சியில் 'சீட்' பெற நிர்வாகிகளிடையே போட்டி அதிகரித்துள்ளது.தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி உட்பட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை மாவட்ட சேர்மன் மற்றும் 9

தியாகதுருகம்-நகர்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வரும் நிலையில் ஆளும் கட்சியில் 'சீட்' பெற நிர்வாகிகளிடையே போட்டி அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி உட்பட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை மாவட்ட சேர்மன் மற்றும் 9 ஒன்றிய சேர்மன் பதவிகளை ஆளுங்கட்சியான தி.மு.க., கைப்பற்றியது.இந்நிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் ஆயத்தமாகி வருவதால் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான முன்னேற்பாடுகளை அரசு முடுக்கி விட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினரும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோயிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 3 நகராட்சிகளும், சின்னசேலம், தியாகதுருகம், சங்கராபுரம், வடக்கனந்தல், மணலுார்பேட்டை ஆகிய 5 பேரூராட்சிகளும் உள்ளன.இதில், திருக்கோயிலுார் மற்றும் உளுந்துார்பேட்டை ஆகியவை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இதற்கான வார்டு வரையறை முடிப்பதற்கு கால தாமதம் ஆகும் என்பதால் இங்கு தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.இதனால் கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் 5 பேரூராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து முக்கிய பதவிகளையும் கைப்பற்றிய உத்வேகத்தோடு ஆளும் கட்சி என்ற பலத்துடன் தி.மு.க., களமிறங்க உள்ளது.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளருக்கான மொத்த செலவையும் கட்சித்தலைமை செய்ததால் வேட்பாளர்கள் சிரமமின்றி வெற்றி பெற்றனர். அதேபோல் நகர்புற தேர்தலுக்கும் கட்சித் தலைமை துணையிருக்கும் என கட்சியினர் நம்புகின்றனர்.இக்காரணத்தால் தேர்தலில் வேட்பாளராக 'சீட்' பெறுவதற்கு ஆளும் கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை நடந்து முடிந்த ஊரக தேர்தலில் சில ஒன்றிய கவுன்சிலர் பதவியை மட்டுமே பிடிக்க முடிந்தது. கட்சித் தலைமையிடம் இருந்து எதிர்பார்த்த ஒத்துழைப்பு இல்லை என்ற ஆதங்கம் கட்சியினரிடையே வெளிப்படையாக தெரிகிறது.வேட்பாளராக களத்தில் நிற்பவர்களே ஒட்டு மொத்த செலவையும் செய்ய வேண்டும் என்ற நிலை அ.தி.மு.க., வில் உள்ளதால் தேர்தலில் போட்டியிட பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.இதனை கட்சியின் தலைமை புரிந்துகொண்டு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இருப்பினும் நகர்புற வார்டுகளில் மக்கள் செல்வாக்கு மிக்கவர்கள் சுயேச்சையாக நின்றாலும் வெற்றிபெற முடியும் என்பது கடந்த பல தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகிறது.இதனால் அரசியல் பலம், பண பலம் ஆகியவற்றைக் கடந்து மக்களிடம் நற் பெயர் எடுத்த வேட்பாளர்கள் வெற்றி பெற முடியும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

இக்காரணத்தால் ஒவ்வொரு வார்டிலும் மக்களிடம் நன்மதிப்பை பெற்ற நபர்களை வேட்பாளராக நிறுத்த அரசியல் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளதால் அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் அரசியல் களம் மீண்டும் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X