பொது செய்தி

தமிழ்நாடு

பருவ மழையால் நிரம்பி வரும் ஏரிகள்

Added : நவ 11, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-ஏரிகள் நிரம்பி வருவதால் ஏரி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உளுந்துார்பேட்டை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.உளுந்துார்பேட்டை பகுதியில் தொடர் மழையால் நீர் நிலைகள் தண்ணீர் பிடிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் உளுந்துார்பேட்டை பொதுப்பணித் துறைக்குட்பட்ட 62 ஏரிகளில் சேந்தநாடு, மட்டிகை,

உளுந்துார்பேட்டை-ஏரிகள் நிரம்பி வருவதால் ஏரி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உளுந்துார்பேட்டை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.உளுந்துார்பேட்டை பகுதியில் தொடர் மழையால் நீர் நிலைகள் தண்ணீர் பிடிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் உளுந்துார்பேட்டை பொதுப்பணித் துறைக்குட்பட்ட 62 ஏரிகளில் சேந்தநாடு, மட்டிகை, கூ.கள்ளக்குறிச்சி, மணலுார், காட்டுஎடையார் உள்ளிட்ட 11 ஏரிகள் நிரம்பின. மற்ற ஏரிகளிலும் நீர் பிடிப்பு உயர்ந்து வருகிறது.ஏரிகள் நிரம்பி வரும் சூழ்நிலையில் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி வருவதால், ஏரி கரை உடைந்து சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பூங்கொடி தலைமையில் பொதுப்பணித்துறையினர் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மணல் மூட்டைகள், சாக்குகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X