'ஜெய்பீம்' பட விவகாரத்தில் சூர்யாவுக்கு அன்புமணி கடிதம்

Updated : நவ 11, 2021 | Added : நவ 11, 2021 | கருத்துகள் (112) | |
Advertisement
சென்னை : 'ஜெய்பீம் படத்தில், பழங்குடி இளைஞர் ராஜாக்கண்ணுவை கொலை செய்த போலீஸ் அதிகாரியின் உண்மை பெயர் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக, குருமூர்த்தி என மாற்றியது ஏன் என்று பதிலளிக்க வேண்டும்' என, நடிகர் சூர்யாவுக்கு பா.ம.க., இளைஞணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:'ஜெய்பீம்' திரைப்படத்தில், வன்னியர் சமுதாயம் திட்டமிட்டு
Jai Bhim, Suriya, Anbumani Ramadoss,அன்புமணி ராமதாஸ்

சென்னை : 'ஜெய்பீம் படத்தில், பழங்குடி இளைஞர் ராஜாக்கண்ணுவை கொலை செய்த போலீஸ் அதிகாரியின் உண்மை பெயர் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக, குருமூர்த்தி என மாற்றியது ஏன் என்று பதிலளிக்க வேண்டும்' என, நடிகர் சூர்யாவுக்கு பா.ம.க., இளைஞணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.



கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:


'ஜெய்பீம்' திரைப்படத்தில், வன்னியர் சமுதாயம் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டு உள்ளது. இந்தப் படம் தங்களின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவந்திருப்பது நியாயமற்றது; மனசாட்சி உள்ளவர்களால் ஏற்க முடியாதது. தயாரிப்பாளர் என்ற முறையில், கீழ்கண்ட கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்க வேண்டும். கேள்விகள் விபரம்:


latest tamil news




இது உண்மை நிகழ்வு திரைப்படம் தானா?


* கொலையுண்ட பழங்குடி இளைஞர் பெயர் ராஜாக்கண்ணு. அவரை படுகொலை செய்த காவல் துறை அதிகாரி பெயர் அந்தோணிசாமி. ராஜாக்கண்ணுக்காக போராடும் வழக்கறிஞர் பெயர் சந்துரு. விசாரணை அதிகாரியான காவல்துறை ஐ.ஜி.,யின் பெயர் பெருமாள்சாமி என உண்மை நிகழ்வின் கதாபாத்திரங்கள் பெயரையே சூட்டியுள்ளீர்கள்.

ஆனால், காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு மட்டும், அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என மாற்றியது ஏன்; நீதிமன்ற விசாரணையில் அவரை குரு, குரு என்று அழைக்கும் வகையில் காட்சி அமைத்தது ஏன்?

* ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி, இப்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டத்தில், ஊராட்சி தலைவரும், ஊர் மக்களும் தான் தனக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அனைவருமே வன்னியர்கள். திரைப்படத்தில் ஊர் மக்களையும், ஊராட்சி தலைவரையும் கெட்டவர்களாகவும், ஜாதி வெறி கொண்டவர்களாகவும் சித்தரித்தது ஏன்? இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Bala - London,யுனைடெட் கிங்டம்
15-நவ-202108:10:35 IST Report Abuse
S Bala அப்பன் இராமாயணம் பேசி இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளவர்களையும் தம்பி விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி அவர்களையும் இழுப்பார்கள். இவன் மனைவி பெயரை சொல்லி முஸ்லிம்களை வளைப்பான். இனி தாழ்ந்துவிட்டவர்களுக்கு ஆதரவாக பேசியும் கிறித்தவர்களை நல்லவர்களாக காட்டியும் அவர்களையும் இழுப்பான். மொத்தத்தில் அனைத்து வகுப்பினரையும் தங்கள் பக்கம் இழுக்க மொத்த குடும்பமும் திட்டம் போட்டு வேலை செய்கிறது. கூடிய சீக்கிரம் அரசியலில் குதித்து கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதற்கு அச்சாரம்தான் அகரம்.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
13-நவ-202118:37:58 IST Report Abuse
jagan எல்லா படத்திலும் ஜாதியை புகுத்தி மாற்றம் செய்வதால் சூரிய என்கிற சொறியாவின் நம்பகத்தன்மை ( credibility ) சங்கு ஊதிவிட்டது
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
12-நவ-202100:33:58 IST Report Abuse
r ravichandran உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்க பட்டதாக திரு சூரியா சொல்லி இருக்கிறார், படத்தின் தயாரிப்பாளர் இவர் தான். இயக்குனர் இவரது உறவினர். உண்மை சம்பவத்தில் உள்ள பாதிக்கப்பட்டவர் பெயர், போலீஸ் அதிகாரி பெயர், வக்கீல் பெயர் எதையும் மாற்றாமல் அப்படியே வைத்துள்ளார். இந்த பெயர்கள் அனைத்தும் இந்து மதத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள். ஆனால் காவல் நிலைய ஆய்வாளர் பெயரை மட்டும் மாற்றி விட்டார். காரணம் அவர் தலித் கிருத்துவ மதத்தை சேர்ந்தவர். பெயர் அந்தோனி சாமி. அவர் செய்த குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்றவர். அந்த பெயரை வைப்பதற்கு சூர்யாவிற்கு பயம். கிருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். குருமூர்த்தி என்று பெயர் வைப்பதற்கு பதிலாக வேறு பெயரை வைத்து இருக்கலாம். தனது பெயரை கூட வைத்து இருக்கலாம். ஆனால் வேண்டும் என்றே குருமூர்த்தி என்று பெயர் மாற்றம் செய்து, குரு குரு என்று அழைப்பதற்கு உள்நோக்கம் உள்ளது. வன்னியர் சங்க அடையாள குறியீடுகள் அந்த ஆய்வாளர் வீட்டில் காலண்டர் ஆக இருந்ததும உள்நோக்கம் இருப்பது தான். எதிர்ப்பு வரும் என்று தெரிந்து தான், ஸ்டாலின் போன்று முக்கிய மானவர்களை படம் பார்க்க வைத்து promote செய்து இருக்கிறார்.
Rate this:
sivakumaran - Coimbatore,இந்தியா
13-நவ-202123:51:17 IST Report Abuse
sivakumaranஅந்தோணிசாமி தலித் கிறிஸ்தவர் இல்லை, முதலியார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X