கண்மாய்களில் தனிக்கவனம்: கண்காணிப்பு அலுவலர் காமராஜ் உறுதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கண்மாய்களில் தனிக்கவனம்: கண்காணிப்பு அலுவலர் காமராஜ் உறுதி

Added : நவ 11, 2021
Share
விருதுநகர் : ''மழையால் கண்மாய்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்,'' என, விருதுநகர் மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குனர் காமராஜ் கூறினார்.விருதுநகரில் அவர் கூறியதாவது: இன்று மாவட்ட அதிகாரிகளுடன் கண்காணிப்பு குழு கூட்டம் நடக்க உள்ளது. அதை தொடர்ந்து அணைகள், கண்மாய்கள், வெள்ள அபாய பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளேன்.

விருதுநகர் : ''மழையால் கண்மாய்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்,'' என, விருதுநகர் மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குனர் காமராஜ் கூறினார்.

விருதுநகரில் அவர் கூறியதாவது: இன்று மாவட்ட அதிகாரிகளுடன் கண்காணிப்பு குழு கூட்டம் நடக்க உள்ளது. அதை தொடர்ந்து அணைகள், கண்மாய்கள், வெள்ள அபாய பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளேன். மாவட்ட நிர்வாகம் செய்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆய்வு செய்கிறேன். விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த வரை கண்மாய்கள் நிரம்பும் போது ஏற்படும் உடைப்பு போன்ற பேரிடர் விபத்தை தடுக்க அதிக கவனம் செலுத்த உள்ளேன். பொதுப்பணித்துறை, ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X