பொது செய்தி

தமிழ்நாடு

ராஜராஜசோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு

Added : நவ 11, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே தோணுகாலில் எஸ்.பி.கே., கல்லுாரி வரலாற்று பேராசிரியர் விஜயராகவன் தலைமையில் வரலாற்று ஆய்வாளர் சசிகுமார் ,மாணவர்கள் சரத்ராம், ராஜபாண்டி, ஈஸ்வரன் ஆகியோர் கள ஆய்வில், ராஜராஜ சோழன் காலத்து வட்டெழுத்து கல்வெட்டை கண்டெடுத்துள்ளனர்.இது தொடர்பாக பேராசிரியர் விஜயராகவன் கூறியதாவது: குளம்,கண்மாய்களில் உள்ள நீரை நிலங்களுக்கு திறந்து

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே தோணுகாலில் எஸ்.பி.கே., கல்லுாரி வரலாற்று பேராசிரியர் விஜயராகவன் தலைமையில் வரலாற்று ஆய்வாளர் சசிகுமார் ,மாணவர்கள் சரத்ராம், ராஜபாண்டி, ஈஸ்வரன் ஆகியோர் கள ஆய்வில், ராஜராஜ சோழன் காலத்து வட்டெழுத்து கல்வெட்டை கண்டெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பேராசிரியர் விஜயராகவன் கூறியதாவது: குளம்,கண்மாய்களில் உள்ள நீரை நிலங்களுக்கு திறந்து விடுவதற்கு அமைக்கப்படும் அமைப் பை மடை என்பர்.நீர்நிலைகளில் நீரை சேகரிக்க உதவும் அமைப்பு இது. உறுதியான கருங்கற்களில் அமைக்கப்பட்ட மடையை கல்மடை என்பர். இத்தகைய கல்மடைகள் தான் தோணுகாலில் கண்டறியப்பட்டுள்ளது.இரண்டு கல்மடைகள் 15 அடி உயரத்தில் உள்ளன.

துாணின் மேற்பகுதியில் 22 வரிகள் கொண்ட வட்டெழுத்தும் மற்றொரு துாணில் 7 வரிகள் கொண்ட வட்டெழுத்தும் உள்ளது. இந்த கல்வெட்டுகளை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சாந்தலிங்கம் உதவியோடு படிக்கப்பட்டதில்,இரண்டு கல்வெட்டுகளும் கி.பி.985 ல் ஆட்சிக்கு வந்த ராஜ ராஜ சோழனின் 17 வது ஆட்சியாண்டில் ( கி.பி. 1002) அவரது ஆளுகைக்கு உட்பட்ட பூங்கான நாட்டின் சிற்றரசன் இனவங்குன மேண்டி என்பவர் ,இந்த இடத்தில் உள்ள துாங்கி ஏரியை வெட்டி 2 மதகுகளை அமைத்து கொடுத்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

துாங்கி ஏரி என்பது தோணுகாலில் உள்ள தற்போதைய கண்மாயின் பழைய பெயர். தற்போது ராஜ ராஜ சோழனின் 1036 வது சதய விழா நம்பர் 13ல் கொண்டாடும் வேளையில், தற்போது அவர் காலத்தில் வெட்டப்பட்ட மடைகல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X