கம்யூ.,க்களுடன் கூட்டணி வைத்துள்ளதால் தான், தமிழக அரசு இந்த விவகாரத்தில் இன்னமும் மவுனமாக இருக்கிறது....

Updated : நவ 11, 2021 | Added : நவ 11, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், கேரள முதல்வருக்கு வெறுமனே கடிதம் எழுதுவதோடு நிறுத்தாமல், அவர்களது கூட்டணி கட்சியை சேர்ந்த கேரள முதல்வரை, தமிழக அமைச்சர்களை அனுப்பி சந்தித்து, கேரளாவின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.கம்யூ.,க்களுடன் கூட்டணி வைத்துள்ளதால் தான், தமிழக அரசு இந்த விவகாரத்தில் இன்னமும் மவுனமாக
தினகரன், கஸ்துாரி

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், கேரள முதல்வருக்கு வெறுமனே கடிதம் எழுதுவதோடு நிறுத்தாமல், அவர்களது கூட்டணி கட்சியை சேர்ந்த கேரள முதல்வரை, தமிழக அமைச்சர்களை அனுப்பி சந்தித்து, கேரளாவின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.


கம்யூ.,க்களுடன் கூட்டணி வைத்துள்ளதால் தான், தமிழக அரசு இந்த விவகாரத்தில் இன்னமும் மவுனமாக இருக்கிறது. இதே நேரம், அங்கு, பா.ஜ., ஆட்சியில் இருந்தால் நிலைமையே வேறு தான்...ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரை வைகோ பேட்டி: என் தந்தை வைகோவின் இத்தனை ஆண்டு அரசியலால், என் தாய்க்கு நிம்மதி கிடையாது. என் மனைவி என்னிடம், 'அரசியல் எல்லாம் வேண்டாம்' என்றார். என் மகளும், 'இது நமக்கு வேண்டாம்' என்றார். எனினும், அரசியலுக்கு வந்து விட்டேன்.


உங்கள் தந்தையும் நீங்கள் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. பின், எது உங்களை அரசியலுக்கு இழுத்து வந்தது என்பதை சொல்லி விடலாமே!சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோர் பின்தொடரும் நடிகை கஸ்துாரி பேட்டி: நடிகர் ரஜினியின், அண்ணாத்த படம் வெளியாகி இருப்பதால் தான், தியேட்டர்களில், 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது என்பது, 100 சதவீத உண்மை. அந்த படம் பொங்கலுக்கு வந்திருந்தால், 100 சதவீத இருக்கை நிரப்பும் அனுமதியை அரசு பொங்கலுக்கு நீட்டித்திருக்கும்.


அப்போ ரஜினியும், ஒரு பட நிறுவனமும் நினைத்தால், இந்த அரசில் எதையும் செய்ய முடியும் போலிருக்கிறதே...நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: 'நீட்' தேர்வு தந்த மன அழுத்தத்தால், சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மாணவர் தற்கொலையை தடுக்க மத்திய - மாநில அரசுகளின் அலட்சியம் கண்டனத்திற்குரியது.


latest tamil news
எல்லா விவகாரத்திலும் வித்தியாசமாக யோசிக்கிறீர்கள். ஆனால், நீட் விவகாரத்தில் மட்டும், திராவிட கட்சிகளை பின்பற்றுகிறீர்களே ஏன்?தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை:
70 ஆண்டு பழமையான சாலைகள், கட்டடங்கள் கூட இன்னும் உறுதியாக இருக்கின்றன. ஆனால், தளவானுார் அணை கட்டி ஓராண்டுக்குள் இரண்டு முறை இடிந்து விழுந்துள்ளது, கடந்த அ.தி.மு.க., அரசின் லட்சணத்துக்கு இதுவே சிறந்த உதாரணம்.


கடந்த ஆண்டில் கட்டப்பட்ட இன்னும் எத்தனை அணைகள், தடுப்பணைகள் உடையப் போகின்றனவோ... முந்தைய, தி.மு.க., அரசின் 'டெண்டர்' முறையை, அ.தி.மு.க., அரசு பின்பற்றியதால் வந்த வினை இதுவோ?ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் அறிக்கை: பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூரில் நான்காவது முறையாக நேற்று முன்தினமும் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. பலமுறை புகார் அளித்தும், தமிழக அரசு வேடிக்கை தான் பார்க்கிறது. இது, ஹிந்துக்களுக்கு அநீதி. தட்டிக் கேட்பாரா அமைச்சர் சேகர்பாபு?


எதற்கெல்லாமோ போராட்டம் நடத்தும் கட்சிகள், ஹிந்து கோவில்களின் சிலை உடைப்பை கண்டித்து, வாய் திறக்க மறுப்பதேன் என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாரோ?


Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-நவ-202102:02:17 IST Report Abuse
Natarajan Ramanathan ரஜினியின் இந்த படத்தை வேறு ஏதாவது பட நிறுவனம் தயாரித்து இருந்தாலோ அல்லது விநியோக உரிமை ரெட்ஜயண்ட் நிறுவனத்துக்கு கிடைக்காமல் இருந்தாலோ படம் வெளியாவதிலேயே சிக்கல் வந்திருக்கும்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
11-நவ-202121:05:12 IST Report Abuse
S. Narayanan Thanks நாட்டின் ஒரு தாய் மக்கள் இடம் ஸ்டாலின் வேறுபாடு காட்டுவதை நிறுத்தினால் எல்லாம் சரியாகும்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
11-நவ-202121:02:32 IST Report Abuse
S. Narayanan நீட் தேர்வை இனி நீட்டி முழக்க முடியாது. மாணவர்கள் நீட் தேர்வை ஆவலுடன் எதிர்கொள்ள மணபக்குவம் அடைந்து விட்டார்கள். அதனால் சஞ்சலப்படும் ஓரிரு மாணவர்களுக்கு உங்களால் முடிந்தால் அவர்களை தைரியமாக தேர்வு எழுத உதவுங்கள். இல்லாவிடில் வீட்டில் உட்கார்ந்து குடும்பத்தை கவனியுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X