ரயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேக்கத்தால் போக்குவரத்து பாதிப்பு

Added : நவ 11, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் ரயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஈரோட்டில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. ஈரோட்டில் மழை நீர், கழிவு நீர் செல்லும் வடிகால் எங்கும் முறையாக இல்லாததால், பல இடங்களில் மக்கள் பரிதவிக்கின்றனர். குறிப்பாக, ஈரோடு, சென்னிமலை

ஈரோடு: ஈரோட்டில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் ரயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


ஈரோட்டில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. ஈரோட்டில் மழை நீர், கழிவு நீர் செல்லும் வடிகால் எங்கும் முறையாக இல்லாததால், பல இடங்களில் மக்கள் பரிதவிக்கின்றனர். குறிப்பாக, ஈரோடு, சென்னிமலை சாலை ரங்கம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம், காளை மாட்டு சிலை அருகே உள்ள ரயில்வே நுழைவு பாலம், வெண்டிபாளையம் ரயில்வே நுழைவு பாலம் ஆகியவற்றில் மிக அதிகமாக தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இந்த தண்ணீர் வெளியேறவும், வெளியேற்றவும் வழி இல்லை. மாநகராட்சி சார்பில் அவ்வப்போது டீசல் மோட்டார் வைத்து அவற்றை வெளியேற்றினாலும், சில மணி நேரத்தில் மீண்டும் தண்ணீர் தேங்கிவிடுகிறது. அவ்வாறு தேங்கும் பட்சத்தில், சென்னிமலை சாலையில் செல்வோர், ஐந்து கி.மீ., சுற்றி ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் வழியாகவும், கே.கே.நகர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. அதுபோல வெண்டிபாளையம் பகுதிக்கு செல்வோரும், கரூர் பிரதான சாலை, சுற்றி செல்ல நேரிடுகிறது. கே.கே.நகர் சுற்றி செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளதால், மழை காலங்களில் அச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க நிரந்தரமான தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X