பொது செய்தி

தமிழ்நாடு

சேதம் அடைந்த பயிர்கள்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு

Added : நவ 11, 2021
Share
Advertisement
வாழப்பாடி:அயோத்தியாபட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில், மழை, வெள்ளத்தால் நெற்பயிர்கள் சேதம் அடைந்தது. சில இடங்களில் பயிர்கள் மூழ்கின. இதனால் வேளாண் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.பின், மூழ்கிய பயிர்களுக்கு, மேலாண் முறை குறித்து, அயோத்தியாப்பட்டணம் வேளாண் உதவி இயக்குநர் சரஸ்வதி வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவ மழையால் நெல் வயலில் அதிகளவில் தண்ணீர் தேங்கினால்

வாழப்பாடி:அயோத்தியாபட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில், மழை, வெள்ளத்தால் நெற்பயிர்கள் சேதம் அடைந்தது. சில இடங்களில் பயிர்கள் மூழ்கின. இதனால் வேளாண் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.


பின், மூழ்கிய பயிர்களுக்கு, மேலாண் முறை குறித்து, அயோத்தியாப்பட்டணம் வேளாண் உதவி இயக்குநர் சரஸ்வதி வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவ மழையால் நெல் வயலில் அதிகளவில் தண்ணீர் தேங்கினால் உடனே வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வடித்து, பயிரின் வேர் பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க செய்ய வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கூடுதலாக, 25 சதவீதம் தழைச்சத்து, சாம்பல் சத்து மேலுரமாக இடவேண்டும். நீரில் மூழ்கிய பயிருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால், ஏக்கருக்கு, 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சத்துடன், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு இரவு முழுதும் மூட்டம் போட்டு வைத்து, தண்ணீர் வடிந்தவுடன் வயலில் இடவேண்டும். போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டதும், ஏக்கருக்கு, 2 கிலோ யூரியா, 1 கிலோ துத்தநாக சல்பேட் உரங்களை, 200 லிட்டர் நீரில் கலந்து, இலை வழியாக தெளிக்க வேண்டும். பயிரின் தண்டு உருளும் பருவம், பூக்கும் பருவத்தில் உள்ள பயிருக்கு, 4 கிலோ டி.ஏ.பி., உரத்தை, 10 லிட்டர் நீரில் கலந்து முதல்நாள் ஊறவைத்து, மறுநாள் வடிகட்டி கரைசலுடன், 2 கிலோ யூரியா, 1 கிலோ பொட்டாஷ் உரத்தையும், 200 லிட்டர் நீரில் கலந்து, கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். மேலும், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட நெல் - ஐஐ சிறப்பு பருவத்தில், நெற்பயிருக்கு ஏக்கருக்கு, 519 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்து, மகசூல் இழப்பை தவிர்க்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X