பொது செய்தி

தமிழ்நாடு

தம்மம்பட்டியில் 52 மி.மீ., மழை

Added : நவ 11, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல், விடிய, விடிய மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, தம்மம்பட்டியில் அதிகபட்சம், 52 மி.மீ., மழை பதிவானது. வீரகனூர், 48, ஆத்தூர், 28, பெத்தநாயக்கன்பாளையம், 25, கரியகோவில், 15, கெங்கவல்லி, 13.5, ஏற்காடு, 12, ஆணைமடுவு, 10, காடையாம்பட்டி, 9.8, சேலம், 9.7, சங்ககிரி, 9.5, இடைப்பாடி, 9.4, ஓமலூர், 8, மேட்டூர், 3.8 மி.மீ., மழை பெய்தது. தொடர்ந்து, காலை, 11:00 மணி வரை,

சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல், விடிய, விடிய மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, தம்மம்பட்டியில் அதிகபட்சம், 52 மி.மீ., மழை பதிவானது. வீரகனூர், 48, ஆத்தூர், 28, பெத்தநாயக்கன்பாளையம், 25, கரியகோவில், 15, கெங்கவல்லி, 13.5, ஏற்காடு, 12, ஆணைமடுவு, 10, காடையாம்பட்டி, 9.8, சேலம், 9.7, சங்ககிரி, 9.5, இடைப்பாடி, 9.4, ஓமலூர், 8, மேட்டூர், 3.8 மி.மீ., மழை பெய்தது. தொடர்ந்து, காலை, 11:00 மணி வரை, சாரல் மழை நீடித்தது. பின், சூரியன் லேசாக தலைகாட்டிய நிலையில், வானமும் 'பளிச்சென மாறியது.


வேரோடு சாய்ந்த மரம்: பனமரத்துப்பட்டி அடுத்த, குரங்குபுளியமரம் பஸ் ஸ்டாப் அருகே, சேலம் - கம்மாளப்பட்டி பிரதான சாலையில், நேற்று, குடவேல மரம் வேரோடு சாய்ந்தது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சேலத்தில் இருந்து வந்த டவுன் பஸ்கள், கூட்டாறு பஸ் ஸ்டாப்பில் இருந்து திருப்பிவிடப்பட்டன. வனத்துறை, வருவாய்த்துறையினர், மரத்தை அப்புறப்படுத்தினர். இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏரி நிரம்பியதால் வழிபாடு: ஆத்தூர், புத்திரகவுண்டன்பாளையம் ஏரி நேற்று நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது. மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் தலைமையில், ஆத்தூர் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர், ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறும் பகுதியில் பூக்கள், தானியங்களை தூவி வழிபட்டனர். அதேபோல், பெத்தநாயக்கன்பாளையம் அருகே, மேற்கு ராஜாபாளையத்தில், குட்டக்கரை, ஜம்மங்குட்டை ஏரி நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X