பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத பாதிப்பு: ஆய்வு செய்ய குழு அமைப்பு

Updated : நவ 11, 2021 | Added : நவ 11, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை: டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேத பாதிப்பை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் தென்னரசு, அன்பில் மகேஷ், ரகுபதி, மெய்யநாதன், பெரியகருப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.குழுவினர், டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து மீட்பு பணிகளை
டெல்டா மாவட்டங்கள், பயிர் பாதிப்பு, அமைச்சர்கள் குழு, முதல்வர் ஸ்டாலின்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேத பாதிப்பை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் தென்னரசு, அன்பில் மகேஷ், ரகுபதி, மெய்யநாதன், பெரியகருப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.குழுவினர், டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


அதிகாரிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் மழை மற்றும் வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அமைச்சர்கள், சிறப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, நிவாரண உதவிகள், மருத்துவ வசதி ஆகியவற்றை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


அதிகாரிகளுடன் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் , அமைச்சர்கள் துரைமுருகன், பன்னீர்செல்வம், தலைமை செயலர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


latest tamil news



வெள்ள பாதிப்பு, மக்களை தங்க வைத்தல், நிவாரண உதவிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனிடையே, இன்று மாலை கடலூர் செல்லும் ஸ்டாலின், மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
11-நவ-202119:48:39 IST Report Abuse
தியாகு கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவின் சுடாலின் போட்டோவில் பார்க்கும்போது மெழுகு பொம்மை மாதிரி இருக்கிறார். பொம்மையை இயக்குவது யாரென்று தெரியவில்லை.
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
11-நவ-202118:22:04 IST Report Abuse
தியாகு டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத பாதிப்பு: ஆய்வு செய்ய குழு அமைப்பு. ..ஹி.ஹி...ஹி...விஞ்ஞான ரீதியில் பணத்தை ஆட்டையை போட குழு அமைச்சாச்சு. கோபாலபுரம் கமிஷன் எவ்வளவுன்னு தெரியல.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
11-நவ-202117:18:15 IST Report Abuse
Anand விடியலோட இந்த குழுவுக்கு மேக்கப் போட்டுக்கொள்ளவே நேரம் பத்தாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X