சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

நீரை தூய்மையாக்கும் நிலக்கரி!

Added : நவ 11, 2021
Share
Advertisement
நிலக்கரிக்கு உலகம் மெல்ல மெல்ல பிரியாவிடை கொடுத்து வருகிறது. அதை எரித்துப் புகையையும் சாம்பலையும் வெளியேற்றுவது கூடாது. என்றாலும் நிலக்கரிக்கு முற்றிலும் மதிப்பில்லாமல் போய்விடாது. ஒரு புதிய ஆய்வின்படி, உப்புக் கரிக்கும் கடல் நீரை, துாய குடிநீராக மாற்றுவதற்கு நிலக்கரி மிகவும் உதவியாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.சவூதியிலுள்ள மன்னர் அப்துல்லா அறிவியல்
 நீரை தூய்மையாக்கும் நிலக்கரி!

நிலக்கரிக்கு உலகம் மெல்ல மெல்ல பிரியாவிடை கொடுத்து வருகிறது. அதை எரித்துப் புகையையும் சாம்பலையும் வெளியேற்றுவது கூடாது. என்றாலும் நிலக்கரிக்கு முற்றிலும் மதிப்பில்லாமல் போய்விடாது. ஒரு புதிய ஆய்வின்படி, உப்புக் கரிக்கும் கடல் நீரை, துாய குடிநீராக மாற்றுவதற்கு நிலக்கரி மிகவும் உதவியாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

சவூதியிலுள்ள மன்னர் அப்துல்லா அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த வெற்றிகரமான ஆய்வை செய்துள்ளனர். நிலக்கரி மற்றும் விறகுக் கரி ஆகியவற்றை பொடி செய்து, கலந்து, அவற்றை பெரும் அழுத்தத்தில் கட்டிகளாக ஆக்குகின்றனர். பின், அதனுடன் பருத்தி இவைகளையும் சேர்த்து, ஒரு வடிகட்டியாக ஆக்கி, உப்பு நீர் தொட்டியில் இட்டு, சூரிய ஒளியில் வெப்பம் ஏற்றும் படி செய்தனர். இதில் வடிகட்டிக்குள் புகுந்த நீர் ஆவியாகி, வெளியேறி குளிர்ந்து குடிநீராக மாறுகிறது.

கடல் நீரின் உப்பு வடிகட்டியிலேயே தங்கிவிடுகிறது. அந்த உப்பை கழுவி அகற்றிவிட்டு, மீண்டும் நிலக்கரி வடிகட்டியை பல முறை பயன்படுத்தலாம்.சவூதி ஆய்வாளர்கள், தற்போது நெதர்லாந்தைச் சேர்ந்த, “பெரா” என்ற புத்திளம் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் அது நிலக்கரி நீர் வடிகட்டியை சந்தைப்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X