சென்னை: தமிழகத்தில் கனமழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் பெய்த மழை காரணமாக தற்போது வரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 1,45,000 ஏக்கர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. 187 கால்நடைகள் இறந்துள்ளன. 237 வீடுகள், 1,146 குடிசை வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்பு மற்றும் சேதத்திற்கு நிவாரணம் வழங்கப்படும். மழை பாதிப்பு தொடர்பாக கணக்கெடுக்கும் நாளை துவங்கும். மழையின் அளவை பொறுத்து ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிக்கப்படும். இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறுகையில், 6 ஆயிரம் தோட்டக்கலை பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. அமைச்சர் குழு அறிக்கை அளித்த பின்னர் நிவாரணம் அளிக்கப்படும். விவசாயிகள் காப்பீடு செய்வதற்கான தேதியை நீட்டிக்கும்படி மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE