பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : நவ 11, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 1,086 கன அடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களாக பரவலாக மழை பெய்வதால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் கடந்த செப்., 22 முதல், 50 அடிக்கு மேல் உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு, 817 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 1,086 கன அடியாக

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 1,086 கன அடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களாக பரவலாக மழை பெய்வதால், கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் கடந்த செப்., 22 முதல், 50 அடிக்கு மேல் உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு, 817 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 1,086 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு, இடது மற்றும் வலப்புற வாய்க்கால் மூலம், 177 கன அடி, சிறிய மதகின் மூலம் தென்பெண்ணை ஆற்றில், 909 கன அடி என மொத்தம், 1,086 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் கரையை தொட்டு தண்ணீர் ஓடுகிறது. நேற்று அணையின் மொத்தம் உயரமான, 52 அடியில், நீர்மட்டம், 51 அடியாகவும், நீர் இருப்பு, 1.55 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. வடக்கிழக்கு பருவ மழையால் பல மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X