தாளவாடி மலைப்பகுதியில் சிறுத்தை தாக்கியதில் விவசாயி படுகாயம்; மலைகிராம மக்கள் அச்சம்

Added : நவ 11, 2021 | |
Advertisement
புன்செய்புளியம்பட்டி: தாளவாடி மலைப்பகுதியில், சிறுத்தை தாக்கியதில், கால்நடைகள் மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி படுகாயமடைந்தார்.ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து வெளிவரும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது விவசாய தோட்டத்தில் புகுந்து, ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகின்றன. ஜீரகள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட அருள்வாடி கிராமத்தை

புன்செய்புளியம்பட்டி: தாளவாடி மலைப்பகுதியில், சிறுத்தை தாக்கியதில், கால்நடைகள் மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி படுகாயமடைந்தார்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து வெளிவரும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது விவசாய தோட்டத்தில் புகுந்து, ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகின்றன. ஜீரகள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட அருள்வாடி கிராமத்தை சேர்ந்தவர் வீரண்ணா, 51; விவசாயியான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் தன் மானாவாரி நிலத்தில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது வனத்தில் இருந்து திடீரென வெளியேறிய சிறுத்தை, வீரண்ணாவை தாக்கியது. அப்போது அவர் கையில் வைத்திருந்த குச்சியால் சிறுத்தையை அடித்து விரட்டினார். இருப்பினும் சிறுத்தை தாக்கியதால் வீரண்ணாவின் கை, முதுகு,கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் வீரண்ணாவை சிகிச்சைக்காக தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது தொடர்பாக ஜரீரஹள்ளி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயியை சிறுத்தை தாக்கிய சம்பவம், மலைகிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X