பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு; உபரி நீர் திறப்பு 2,500 கன அடியாக குறைப்பு

Added : நவ 11, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு, 10 ஆயிரம் கன அடியிலிருந்து, 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டது. பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 103 அடியாகவும், நீர் இருப்பு, 31.1 டி.எம்.சி., ஆகவும் உள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால்

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு, 10 ஆயிரம் கன அடியிலிருந்து, 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டது. பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 103 அடியாகவும், நீர் இருப்பு, 31.1 டி.எம்.சி., ஆகவும் உள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து, பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக பவானி ஆற்றில், 10 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 2,532 கனஅடியாகவும், மதியம், 1,442 கன அடியாகவும் குறைந்தது. இதன் காரணமாக உபரி நீர் திறப்பு, 2, 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இருப்பினும் அணைக்கு நீர்வரத்தை பொறுத்து பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பின் அளவு அவ்வப்போது மாறுபடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணியில் வருவாய் துறையினர் மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X