சுடிதார் ஆர்டர் செய்த பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.90 ஆயிரம் அபேஸ்| Dinamalar

சுடிதார் 'ஆர்டர்' செய்த பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.90 ஆயிரம் அபேஸ்

Added : நவ 11, 2021 | |
சேலம்: ஆன்லைனில் சுடிதார், 'ஆர்டர்' செய்த பெண்ணின் வங்கி கணக்கில், 90 ஆயிரம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டது.சேலம் மாவட்டம், ஓமலூர், வெத்தலைக்காரனூரை சேர்ந்த காளியப்பன் மனைவி ரிஸ்வானா, 30. இவர், கடந்த அக்., 12ல், ஆன்லைனில், சுடிதார் 'ஆர்டர்' செய்தார். அதற்காக, வங்கி கணக்கில் இருந்து, 349 ரூபாய் பரிமாற்றம் செய்துள்ளார். ஒரு வாரம் கடந்த நிலையில், சுடிதார் கிடைக்காததால், ஆர்டர் செய்த

சேலம்: ஆன்லைனில் சுடிதார், 'ஆர்டர்' செய்த பெண்ணின் வங்கி கணக்கில், 90 ஆயிரம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம், ஓமலூர், வெத்தலைக்காரனூரை சேர்ந்த காளியப்பன் மனைவி ரிஸ்வானா, 30. இவர், கடந்த அக்., 12ல், ஆன்லைனில், சுடிதார் 'ஆர்டர்' செய்தார். அதற்காக, வங்கி கணக்கில் இருந்து, 349 ரூபாய் பரிமாற்றம் செய்துள்ளார். ஒரு வாரம் கடந்த நிலையில், சுடிதார் கிடைக்காததால், ஆர்டர் செய்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது பேசியவர், பணப்பரிமாற்றத்தை உறுதிப்படுத்த, வங்கி கணக்கு விபரங்களை கேட்டுள்ளார். ரிஸ்வானாவும் தெரிவிக்க, அவரது வங்கி கணக்கில் இருந்து, ஒன்பது தவணையாக, 90 ஆயிரத்து, 349 ரூபாயை அபேஸ் செய்யப்பட்டது. இதுகுறித்து, நேற்று முன்தினம் ரிஸ்வானா அளித்த புகார்படி, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X