சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டாசு தீ விபத்து: தந்தையை காப்பாற்ற முயன்ற மகனும் பலி

Added : நவ 11, 2021
Share
Advertisement
சேலம்: பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய தந்தையை காப்பாற்ற முயன்ற மகனும் உயிரிழந்தார். சேலம் மாவட்டம், முருங்கப்பட்டி அருகே, ஆரியகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பச்சமுத்து, 95. இவரது மகன் வளஞ்செழியன், 51. இவர், எருமாபாளையம் இரண்டாம் கிளையில் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்தார். தீபாவளியையொட்டி கடந்த, 5 இரவு, வீட்டின் அருகே சிறுவர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது,

சேலம்: பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய தந்தையை காப்பாற்ற முயன்ற மகனும் உயிரிழந்தார். சேலம் மாவட்டம், முருங்கப்பட்டி அருகே, ஆரியகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பச்சமுத்து, 95. இவரது மகன் வளஞ்செழியன், 51. இவர், எருமாபாளையம் இரண்டாம் கிளையில் அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்தார். தீபாவளியையொட்டி கடந்த, 5 இரவு, வீட்டின் அருகே சிறுவர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது, பச்சமுத்து படுத்திருந்த குடிசையில் தீப்பற்றியது. இதை கவனித்த வளஞ்செழியன், குடிசையில் புகுந்து தந்தையை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார். அப்போது, தந்தைக்கும், மகனுக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உறவினர்கள் இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அன்று இரவே பச்சமுத்து இறந்துவிட்டார். நேற்று காலை, வளஞ்செழியனும் இறந்தார். இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர். தந்தையை தொடர்ந்து, மகனும் இறந்த சம்பவம், ஆரியகவுண்டம்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X