சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓய்வு பெற்ற அதிகாரி வங்கி கணக்கில் ரூ.6.50 லட்சம் திருட்டு

Added : நவ 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வேலூர்: வேலூரில், ஓய்வு பெற்ற அதிகாரி வங்கி கணக்கில் இருந்து, 6.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டம், விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் முரளிதரன், 65. இவர் மனைவி வசந்தகுமாரி, 61, ஓய்வு பெற்ற தபால் அதிகாரி. இவர் மகன் மதன், லண்டனில் பணிபுரிகிறார். இதனால் அங்கிருந்து அவர் அனுப்பும் பணத்தை, வேலூர் ஸ்டேட் பாங்க் இந்தியா வங்கி கிளையில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சேமித்து

வேலூர்: வேலூரில், ஓய்வு பெற்ற அதிகாரி வங்கி கணக்கில் இருந்து, 6.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.


வேலூர் மாவட்டம், விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் முரளிதரன், 65. இவர் மனைவி வசந்தகுமாரி, 61, ஓய்வு பெற்ற தபால் அதிகாரி. இவர் மகன் மதன், லண்டனில் பணிபுரிகிறார். இதனால் அங்கிருந்து அவர் அனுப்பும் பணத்தை, வேலூர் ஸ்டேட் பாங்க் இந்தியா வங்கி கிளையில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சேமித்து வைத்திருந்தார். கடந்த, 28ல், வசந்தகுமாரி மொபைல் போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில், தாங்கள் இதுவரை வங்கி கணக்கில் பான்கார்டை இணைக்காததால், பணம் எடுக்க முடியாது என கூறி ஒரு, 'லிங்க்'கை அனுப்பி தகவல் தெரிவிக்கும்படி கூறியள்ளனர். அந்த லிங்க்கை 'கிளிக்' செய்து அதில் தன் கணக்கு விபரங்களை வசந்தகுமாரி பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு போன் செய்த நபர், உங்கள் தகவல் தவறு, நாங்கள், 'ஓடிபி நம்பர்' அனுப்புகிறோம்; அதை தெரிவித்தால் பான்கார்டை இணைத்து விடுவோம் என்று கூறியுள்ளார். இதனால் ஓடிபி நம்பரை கூறிய சில நிமிடங்களில், வசந்தகுமாரியின் கணக்கில் இருந்து, ஆறு லட்சத்து, 56 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் வங்கியை தொடர்பு கொண்ட போது, அவர்கள் போன் செய்யவில்லை என்றனர். இது குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில்,' கடந்த ஆறு மாதத்தில், 212 பேர் இது போல பணத்தை ஏமாந்துள்ளனர். வங்கி விபரங்களை போனில் யாராவது கேட்டால் கொடுக்க கூடாது. பணம் எடுப்பது தெரியவந்தால், 155260 என்ற எண்ணுக்கு உடனடியாக தெரிவித்தால் எடுக்கப்பட்ட பணத்தை மீட்டு விடலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-நவ-202116:16:49 IST Report Abuse
Raghasrin இந்த மாதிரி திருட்டு ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி நடக்கிறது. பண பரிமாற்ற நுட்பங்களை அறிந்தவர்களால் தான் இதைசெய்யமுடியுயம். ஒருவர் போனுக்கு ஸ்டேட்பாங்க் முத்திரையுடன் குறுஞ்செய்தி வந்தால் பலர் ஏமாந்து விடுவர் பாங்க் அதிகாரிக்கு குறுஞ்சசெய்தி நகல் போன் நம்பரோடு காண்பித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள். ஸ்டேட் பேங்கில் வங்கி கணக்கை தொடர சற்று யோசிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X