இந்தியாவும், அமெரிக்காவும் இயல்பான கூட்டாளிகள்: மத்திய கல்வி அமைச்சர்!

Updated : நவ 11, 2021 | Added : நவ 11, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புது டில்லி: “இந்தியாவும் அமெரிக்காவும் இயல்பான கூட்டாளிகள், குறிப்பாக கல்வித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளது.” என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட அமெரிக்காவின் 5 நகரங்களில் உள்ள இந்திய துணைத் தூதரங்களுடன் இணைந்து இந்திய தூதரகம் கல்வி தொடர்பான வட்டமேசை

புது டில்லி: “இந்தியாவும் அமெரிக்காவும் இயல்பான கூட்டாளிகள், குறிப்பாக கல்வித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளது.” என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.



latest tamil news



நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட அமெரிக்காவின் 5 நகரங்களில் உள்ள இந்திய துணைத் தூதரங்களுடன் இணைந்து இந்திய தூதரகம் கல்வி தொடர்பான வட்டமேசை கூட்டத்தை புதனன்று ஏற்பாடு செய்திருந்தது. 'இந்திய - அமெரிக்க கல்வி உறவை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் காணொளி காட்சி வாயிலாக இக்கூட்டம் நடைப்பெற்றது. இந்தியா சார்பில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார். அமெரிக்காவின் 20 முன்னணி பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பிரதான் பேசியதாவது: இந்தியாவும் அமெரிக்காவும் இயல்பான கூட்டாளிகள், குறிப்பாக கல்வித் துறையில். இந்திய மற்றும் அமெரிக்க கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன. தொழில்துறை, கல்வித்துறை மற்றும் கொள்கை வடிவமைப்பாளர்களை இணைப்பதில் பிரகாசமான வாய்ப்புகளை காண்கிறேன்.


latest tamil news



இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 2020, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை உலகளவில் திறந்துவிட்டுள்ளது. இக்கொள்கை, ஆராய்ச்சி பங்களிப்பு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கல்வி ஒத்துழைப்புகளை ஊக்குவிக்கிறது. இந்திய கல்வி முறை உலகளாவிய இலக்குகளுடன் இணைவதற்கான வாய்ப்பை புதிய கல்விக் கொள்கை அனுமதிக்கிறது. என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-நவ-202110:20:46 IST Report Abuse
அப்புசாமி ரொம்ப சரி. ட்ரம்ப் ஆட்சி மாறில்ல இங்கேயும் நடக்குது.
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
12-நவ-202108:44:54 IST Report Abuse
Paraman இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாளிகள், ஆனால் பேஜிங்ஜிங் பிடெனும், ஜிங் பின்னும் காதலன், காதலிகள் அமெரிக்காவுக்கிற்கும் சீனாவிற்கும் எஜமான், அடிமை கூட்டாளிகள். பீஜிங் பைடேன் சீனாவின் அடிமை, அல்லக்கை, அடிவருடி. சீனர்கள் தூக்கி எறிந்த எலும்புகளுக்காக அமெரிக்காவையே சீரழிக்கும் மனநோய் முற்றிய சைக்கோ
Rate this:
Cancel
s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
11-நவ-202121:04:09 IST Report Abuse
s.sivarajan இந்தியா, அமெரிக்கா, சைனாவுக்கு உள்ள உறவு ஆடு, புலி, புல்லுக்கட்டு உறவு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X