சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

'செல்பி' பிரசாரம்!

Added : நவ 11, 2021
Share
Advertisement
'தேர்தல் நெருங்க நெருங்க அரசியல்வாதிகள் அரங்கேற்றும் நாடகங்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது' என, புலம்புகின்றனர், உத்தர பிரதேச மாநில மக்கள். இங்கு அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பா.ஜ., எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகியவை வாக்காளர்களை கவர, வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன.
அக்கம் பக்கம்

'தேர்தல் நெருங்க நெருங்க அரசியல்வாதிகள் அரங்கேற்றும் நாடகங்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது' என, புலம்புகின்றனர், உத்தர பிரதேச மாநில மக்கள். இங்கு அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பா.ஜ., எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகியவை வாக்காளர்களை கவர, வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. இவர்களில் சற்று வித்தியாசமாக யோசித்து களம் இறங்கியுள்ளார், ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரி. இவர், முன்னாள் மத்திய அமைச்சரான, மறைந்த அஜித் சிங்கின் மகன்.அஜித் சிங், உ.பி.,யில் வசிக்கும் ஜாட் சமூகத்தினரின் ஆதரவு பெற்றவர். விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.தந்தையை பின்பற்றி ஜெயந்த் சவுத்ரியும், ஜாட் சமூகம் மற்றும் விவசாயிகளின் ஆபத்பாந்தவனாக தன்னை அடையாளம் காட்டி வருகிறார். இவர், சமீபத்தில் இளைஞர்களை கவரும் வகையிலான புதிய அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள, 'மொபைல் ஆப்' எனப்படும் செயலியில், யார் வேண்டுமானாலும், இருக்கும் இடத்தில் இருந்தே, தன்னுடன், 'செல்பி' எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு, இளைஞர்களை பெரிதும் கவரும் என நம்புகிறார் ஜெயந்த் சவுத்ரி. 'இவரது அறிவிப்பு புதுமையாக இருக்கலாம்; ஆனால் செல்பி எடுப்பவர்கள், ஓட்டு போடுவரா என்பது சந்தேகமே' என்கின்றனர், உ.பி., மக்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X