காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் மற்றும் மாங்காடு பகுதிகளில் அதிகளவில் குடியிருப்புகளை மழை நீர் சூழந்துள்ளதால், மீட்பு பணிகளை, மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.நேற்று மட்டும், மழை நீர் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்து, மாங்காடு செல்வகணபதி நகரில் இருந்து 35 பேரும், வரதராஜபுரம் பகுதியில் இருந்து 24 பேரும் மீட்கப்பட்டு, அரசு பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்றைய கணக்கெடுப்பில் 1,546 தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், 502 ஆண்கள்; 517 பெண்கள்; 527 குழந்தைகள்.அதிகபட்சமாக உத்திரமேரூர் தாலுகாவில் 572 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், நேற்று வரை 13 மாடுகள், 7 கன்றுகள் இறந்துள்ளன. 71 வீடுகள் பகுதியளவும், 11 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement