சுதந்திரத்தை பிச்சை என்ற கங்கனாவுக்கு எதிர்ப்பு: தேசத்துரோக வழக்கு போட வலியுறுத்தல்

Updated : நவ 13, 2021 | Added : நவ 11, 2021 | கருத்துகள் (43) | |
Advertisement
புதுடில்லி :'நம் நாடு, 2014ல் தான் உண்மையான சுதந்திரம் அடைந்தது. 1947ல் பெற்றது பிச்சை' என, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கங்கனாவின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ., எம்.பி., வருண், ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரபலங்களும், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அவர் மீது, தேசத்துரோக
சுதந்திரம், பிச்சை , கங்கனா, தேசத்துரோகம், வழக்கு

புதுடில்லி :'நம் நாடு, 2014ல் தான் உண்மையான சுதந்திரம் அடைந்தது. 1947ல் பெற்றது பிச்சை' என, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கங்கனாவின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ., எம்.பி., வருண், ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரபலங்களும், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அவர் மீது, தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, பலரும் தெரிவித்துள்ளனர்.

ஹிந்தி திரைப்பட நடிகை கங்கனா ரனாவத், 34. சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பு ஏற்படுத்துவது இவரது வழக்கம்.மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தபின், 'மும்பை நகரம் வன்முறை மற்றும் போதை பழக்கவழக்கங்கள் அதிகரித்து, குட்டி பாகிஸ்தானாக மாறிவருகிறது' என குற்றம் சாட்டினார். இதற்கு சிவசேனா உள்ளிட்ட கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மஹாத்மா காந்தியை விமர்சித்து, அவரைக் கொன்ற கோட்சேவை புகழ்ந்து இவர்கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், கடும் எதிர்ப்பையும் சம்பாதித்தது.


உயிர் தியாகம்சமீபத்தில், கங்கனா ரனாவத்துக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. இதன்பின், 'டிவி' சேனல் நிகழ்ச்சி ஒன்றில் இவர் பங்கேற்றார்.

அப்போது அவர் கூறுகையில், 'நம் நாடு, 2014ல் தான் உண்மையான சுதந்திரத்தை பெற்றது. 1947ல் பெற்றது பிச்சை' என கூறினார்.கங்கனா ரனாவத்தின் இந்தப்பேச்சுக்கு, பல தரப்பினரும் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துஉள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதி பா.ஜ., எம்.பி,யாக இருப்பவர் வருண். முன்னாள் மத்திய அமைச்சர் மேனகாவின் மகனான இவர், பா.ஜ., தலைமையை, சமீபகாலமாக விமர்சித்து வருகிறார்.

கங்கனா ரனாவத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, வருண் கூறியதாவது: இந்தியாவுக்கு, 1947ல் கிடைத்தது பிச்சை. 2014ல் தான் சுதந்திரம் கிடைத்தது என, கங்கனா கூறியுள்ளது தேச விரோதச் செயலுக்கு சமம். பல லட்சம் மக்களின் உயிர் தியாகத்தாலும், போராட்டதாலும் தான், 1947ல் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. இதை பிச்சை என கூறி, பல லட்சம் மக்களின் தியாகத்தை, கங்கனா அவமானப்படுத்தியுள்ளார்.
பைத்தியகாரத்தனம்
மஹாத்மா காந்தியை அவமானப்படுத்தி, அவரை கொலை செய்தவரை புகழ்ந்த கங்கனா, இப்போது, மங்கள் பாண்டே, ராணி லட்சுமி பாய், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் உட்பட, பலரது ஒப்பற்ற தியாகத்தை கேவலப்படுத்தியுள்ளார். இது பைத்தியகாரத்தனமா; தேசத்துரோகமா? எப்படி கூறலாம். இவ்வாறு, வருண் கூறியுள்ளார்.


சிவசேனா மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ''இந்தியாவுக்கு சுதந்திரம், 99 ஆண்டுகளுக்கு குத்தகையாக வழங்கப்பட்டுஉள்ளது என, பா.ஜ., தலைவர் ஒருவர் சமீபத்தில் கூறி சர்ச்சையை கிளப்பினார். ''அதை வழிமொழிவது போல், கங்கனா கூறியுள்ளார்,'' என்றார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரீத்தி சர்மா மேனன் கூறுகையில், ''நாடு 1947ல் அடைந்த சுதந்திரத்தை பிச்சை என, நடிகை கங்கனா ரனாவத் கூறியது பெரும் கண்டனத்துக்குரியது. ''அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து, மும்பை போலீசார் விசாரிக்க வேண்டும்,'' என்றார்.

ஹிந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர், வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப், ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் ஓனிர், பேட்மின்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டா உட்பட பலரும், கங்கனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர். அவருக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளனர்.பிச்சை என கூறியது ஏன்?


தன் பேச்சு பற்றி கங்கனா ரனாவத் கூறியதாவது: நாட்டில், 1857ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த புரட்சி தான், முதல் சுதந்திர போர் என, நான் கூறியதை மறைத்துள்ளனர். முதல் சுதந்திர போர் நடந்து, 90 ஆண்டுகளுக்கு பின் தான், இந்தியாவுக்கு ஆங்கிலேயர்கள், மஹாத்மா காந்தி ஏந்திய பிச்சை பாத்திரத்தில் சுதந்திரத்தை வழங்கினர். காங்கிரஸ் என்ற பெயரின் பின்னணியில், ஆங்கிலேயர்கள் தான் இருந்தனர். காங்கிரஸ் ஆட்சி, ஆங்கிலேயரின் நீடித்த ஆட்சி தான். அதனால் தான், 2014ல் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என, கூறினேன். இவ்வாறு கங்கனா ரனாவத் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
12-நவ-202122:28:59 IST Report Abuse
sankaseshan பாரத ரத்நா விருதை தங்கள் குடும்பத்தில் உள்ள நேரு இந்திரா ராஜிவ் போன்றோருக்கு கொடுத்து அழகு பார்த்தவனுங்க காங்கிரஸ்கரன் ராமசந்திரன் , ஜெயந்தன் நியாபகமில்லயா ? சாமானியர்களுக்கும் விருது கொடுக்க படுகிறது இப்போது
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
12-நவ-202121:55:01 IST Report Abuse
r ravichandran கங்கனா ரனாவத் கூறிய கருத்தில் என்ன பிழை இருக்கிறது. திலகர், வாவூசி, பாரதியார், அரவிந்த கோஷ், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களை , அரசியல் செய்து அவர்களை ஓரம் கட்டி விட்டு, காங்கிரஸ் கட்சியில் பெரும் அளவில் மெஜாரிட்டி கிடைத்த சர்தார் வல்லபாய் படேல் அவர்களை ஓரம் கட்டி விட்டு, தனக்கு விருப்பம் உள்ள நேருவை, பிரதமராக கொண்டு வந்தவர் தான் காந்தி. அவரும் சூழ்ச்சி நிறைந்த அரசியல்வாதி தான். பிரிட்டிஷ்காரர்கள் இடம், மென்மையான போக்கை கடை பிடிதவர்தான் காந்தி. வெள்ளையர்களின் ஆட்சி நீட்சி தான் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. கருத்தை வெளிப்படையாக சொன்ன கங்கனா ரனாவத் அவர்களுக்கு பாராட்டுகள்.
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
12-நவ-202121:44:07 IST Report Abuse
r ravichandran கருத்து சுதந்திரம் சினிமாவில் கொடுக்க வேண்டும், பேச்சில், எழுத்தில் கொடுக்க வேண்டும் என்று வாய் கிழிய பேசுபவர்கள் தான் , கங்கனா ரனாவத் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிக்காமல் , அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கேட்பது வேடிக்கை ஆக உள்ளது. சுப்ரீம் கோர்ட் காந்தி கொலைக்கும் , வீர சாவர்க்கர் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் ஆதாரமும் இல்லை என்று கூறி விடுதலை செய்த 70 ஆண்டுகள் கழித்து கூட , காங்கிரஸ் கட்சி சாவர்க்கர் தான் காந்தி கொலையாளி என்று கூறுகிறது. இதற்கு காரணம் அரசியல் தான். இதற்கு என்ன தண்டனை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X