ஹிமாச்சல் முதல்வராகிறார் அமைச்சர் அனுராக் தாக்குர்?

Updated : நவ 13, 2021 | Added : நவ 11, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குரை, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் முதல்வராக்க, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இந்த ஆண்டு, பா.ஜ., ஆளும் கர்நாடகா, உத்தரகண்ட், குஜராத் மாநிலங்களில் அடுத்தடுத்து முதல்வர்களை மாற்றி, பா.ஜ., தலைமை அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதனால், பா.ஜ.,வைச் சேர்ந்த இதர மாநில முதல்வர்கள், தங்களுக்கு மாற்றாக வேறு யாரையும்
ஹிமாச்சல் முதல்வர்,அமைச்சர் ,அனுராக் தாக்குர்?

மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குரை, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் முதல்வராக்க, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த ஆண்டு, பா.ஜ., ஆளும் கர்நாடகா, உத்தரகண்ட், குஜராத் மாநிலங்களில் அடுத்தடுத்து முதல்வர்களை மாற்றி, பா.ஜ., தலைமை அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதனால், பா.ஜ.,வைச் சேர்ந்த இதர மாநில முதல்வர்கள், தங்களுக்கு மாற்றாக வேறு யாரையும் கட்சித் தலைமை தேர்வு செய்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.



டில்லிக்கு சென்று, கட்சித் தலைவர்களை முதல்வர்கள் சந்தித்தால், அது முதல்வர் மாற்றம் குறித்து ஆலோசிப்பதற்கான சந்திப்பாகவே இருக்கும் என கட்சியினர் எண்ணுகின்றனர்.இந்நிலையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் ஹிமாச்சல பிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாக்குருக்கும் அந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கு நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ., பெரும் பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில் இங்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், பா.ஜ., அரசுக்கு எதிரான மக்களின் மனநிலையை மாற்றும் வகையில், முதல்வரை மாற்ற கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.மத்திய அமைச்சராக உள்ள அனுராக் தாக்குரை மாநில முதல்வராக்க, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வாரம் இறுதியில் டில்லிக்கு சென்று பா.ஜ., தலைவர்களை முதல்வர் ஜெய்ராம் தாக்குர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்யவே, கட்சித் தலைமையை அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. - புதுடில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ravichandran - chennai,இந்தியா
12-நவ-202122:05:21 IST Report Abuse
r ravichandran இங்கு ஒரு நண்பர் பிஜேபி கட்சியில் ஊழல் அமைச்சர்கள் என்று கருத்து தெரிவித்து உள்ளார். மோடி 4 முறை குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்து உள்ளார். அமித் ஷா அப்போது அங்கு அமைச்சராக இருந்துள்ளார். அங்கு முக்கியமான எதிர் கட்சி காங்கிரஸ் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் மோடி மீது கூறி தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. கடந்த 7 ஆண்டுகால மோடி அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு எதையும் காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர் கட்சிகள் சொல்லமுடியவில்லை ? ராகுல் காந்தி சென்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடி ரபேல் விவகாரத்தில் திருடன் என்று சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது என்று கூறி, பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். சுப்ரீம் கோர்ட் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு ரபேல் விவகாரத்தில் ஊழல் எதுவும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது நினைவு இருக்கலாம்.
Rate this:
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
15-நவ-202111:28:42 IST Report Abuse
Paramanஐயா கட்டுமர கும்பல்கள் போல கமிஷன், கரப்ஷன் செய்துதான் ஊழல் அமைச்சர்கள் என்ற பட்டம் வாங்க வேண்டியதில்லை மக்கள் விரோத கொள்கைகளை ஒரு வெறியோடு முறையின்றி செயல்படுத்தி சர்வாதிகார போக்கோடு செயல்படும் அமைச்சர்களும் என்னை பொறுத்தவரையில் "ஊழல் அமைச்சர்களே". தனி மனித கடன் சுமையை மக்களின் மீது ஏற்றி, விலைவாசி, பணவீக்கத்தை பற்றி புரிதலே இல்லாமல் வரி விதிப்பு என்ற கேடுகெட்ட கொள்கையை தரம் கேட்டு கட்டவிழ்த்து விட்டு மக்களை வதைக்கும் மந்திகளும், அவர்கள் என்னசெய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள கூட இயலாத நிலையில் கண்ணை மூடிக்கொண்டு இருக்கும் பிரதமர் உத்தமரே எனினும் அவரும் இத்தாலி கான்கிரெஸ்ஸின் உத்தம மன்மோகன சிங்கை போன்றவரே...
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
12-நவ-202114:23:30 IST Report Abuse
A.Gomathinayagam நடுவண் அமைச்சரவையில் சொல்லிக்கொள்ளும் படி எந்த சாதனையும் செய்யாதவர்கள் ,மாநிலத்தில் என்ன பண்ண போகிறார்கள்
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
12-நவ-202109:04:41 IST Report Abuse
Paraman பிஜேபி, இத்தாலி கான்கிரேஸுக்கு எந்த விதத்திலும் ஊழலில், சர்வாதிகாரத்தில் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு இந்த தாகூர், நிம்மி சீதா, நிதின் கட்காரி, அமித்ஷா போன்றவர்களே உதாரணம் இவர்களை போன்றவர்களை தன்னிச்சையாக ஆள்வதற்கு விட்டுவிட்டு, மோடி மட்டும் வெறும் விளம்பர பிரதமராக தன்னை பரிசுத்தம் என்று காட்டி கொள்வதினால் இந்த நாட்டு மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இவர்கள் அனைவரும் 2024.இல் பிஜேபியையும், முக்கியமாக மோடியையும் மண்ணை கவ்வ வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மோடி புரிந்து கொள்ளவே இல்லை. பிஜேபியின் ஆணவம் பிடித்த சர்வாதிகார ஊழல் அமைச்சர்களால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் சீன விவகாரமும் வரும் நாட்களில் மிக பெரிய வீழ்ச்சியையும், மாபெரும் அதிர்ச்சியையும் இந்நாட்டு மக்களுக்கு தர காத்திருக்கிறது வழக்கொழிந்து போன 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்', ராமர் கோவில், மற்றும் வெளிநாட்டு கட்டிப்பிடி விளம்பரங்கள் மோடியை காப்பாற்றாது என்பதை மோடி மரண அடிக்கு பின்பே தெரிந்து கொள்வார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X