சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

கருவுற்ற பெண்களுக்கு கவனம் தேவை!

Added : நவ 11, 2021
Share
Advertisement
கரு உருவான முதல் மூன்று மாதங்களுக்கு பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்களை கூறும், டாக்டர் நித்யா ராமச்சந்திரன்: கரு உருவாகி விட்டது என்று தெரிந்ததுமே தாமதிக்காமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. கருவின் துவக்கக் கட்டத்தில் தாய் மிகவும் கவனமாக இருப்பது முக்கியம். ஏனெனில், குழந்தையின் மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம் உட்பட உடலின் முக்கிய உறுப்புகள் உதயமாவது
சொல்கிறார்கள்

கரு உருவான முதல் மூன்று மாதங்களுக்கு பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்களை கூறும், டாக்டர் நித்யா ராமச்சந்திரன்: கரு உருவாகி விட்டது என்று தெரிந்ததுமே தாமதிக்காமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. கருவின் துவக்கக் கட்டத்தில் தாய் மிகவும் கவனமாக இருப்பது முக்கியம். ஏனெனில், குழந்தையின் மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம் உட்பட உடலின் முக்கிய உறுப்புகள் உதயமாவது இக்கால கட்டத்தில் தான்.

எனவே அதில் எந்த பாதிப்பும் இல்லாதிருக்க வேண்டுமெனில், உங்கள் உடல்நிலையும் சீராக இருக்க வேண்டியது அவசியம்.அதிக வேலை செய்தால் கருச்சிதைவு ஏற்படுமோ அல்லது குழந்தைக்கு பாதிப்பு ஏதும் உண்டாகுமோ என்றெல்லாம் வீணாக அச்சப்பட வேண்டாம். அன்றாட வேலைகளில் இயல்பாக இருக்கலாம்; ஆனால், கவனமாக இருக்க வேண்டும். 'பெட் ரெஸ்ட் தேவை' என்று அறிவுறுத்தி இருந்தால் தவிர, இயல்பாக கருக்காலத்தை அனுபவியுங்கள்.வாகன பயணத்தை பொறுத்தவரை அதிர்வு ஏற்படுத்தாத பயணம் அவசியம். குறைந்த துார ரயில், ஆட்டோ, பஸ் பயணங்களால் எந்த பாதிப்பும் வராது; மிக நீண்ட துார கார், விமான பயணத்தை தவிர்ப்பது நல்லது.பொதுவாகவே, பெண்கள் கருவுறும் காலத்தில் முதுகு வலி ஏற்படுவது இயல்பு. எனவே, 'ஹீல்ஸ்' செருப்பு அணிவதை தவிர்க்க வேண்டும். காலை, 'ஸ்லிப்' ஆக்கும் அல்லது வழுக்கும் வகையிலான செருப்புகளை தவிர்ப்பது நல்லது. மாடிப்படிகள் ஏறுவது தவறில்லை; ஆனால், கால்களை வலுவாக தரையில் ஊன்றி ஏற வேண்டும். மூச்சுத்திணறல், ஆஸ்துமா, இதயப் பிரச்னை இருந்தால், மாடி ஏறுதலில் கவனம் தேவை.க
ர்ப்பிணிப் பெண்கள் தினமும், 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரை சரியான வகையில் உட்கொள்ளாமல் இருந்தால், சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, உடலுக்கு தேவையான நீரை அவசியம் உட்கொள்ள வேண்டும். 'சாப்பிட பிடிக்கவில்லை; உடனே வாந்தி வந்து விடுகிறது. அப்புறம் சாப்பிடு கிறேன்' என்று பலர் சொல்வது உண்டு. ஆனால், சத்தான உணவு உடலுக்கு தேவை என்பதால், நேரத்துக்கு சாப்பிட வேண்டும்.

அதிகமாக சாப்பிட்டால் தான் குழந்தை வளரும் என்றும் இல்லை; திருப்தியாக சாப்பிட்டாலே போதுமானது.பழங்களை, 'ஜூஸ்' போட்டு சாப்பிடுவதை விட, கடித்து சாப்பிடுவதே நல்லது. நல்ல உறக்கம் இந்த காலக்கட்டத்தில் அவசியம் தேவை. பக்கவாட்டில் படுக்க விரும்பினால், எழுந்து உட்கார்ந்து திரும்பி படுக்க வேண்டும் என்று அவசியம்இல்லை. உங்களுக்கு சிரமம் இல்லாதபட்சத்தில் எப்போதும் போல் படுத்துக் கொள்ளலாம்; ஆனால், குப்புறப்படுக்கக் கூடாது!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X