அரசியல் செய்தி

தமிழ்நாடு

கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

Updated : நவ 13, 2021 | Added : நவ 11, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
கூடலுார் :பெரியாறு அணை பிரச்னையில், கேரள அரசின் அடாவடியை கண்டித்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், கூடலுாரில் முற்றுகை போராட்டம் நடந்தது.முல்லை பெரியாறு அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், பேபி அணையை பலப்படுத்தி நீர்மட்டம் 152 அடி தேக்கவும்; அணையின் நிர்வாக அதிகாரங்களை, தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு
கேரள அரசு, விவசாயிகள் போராட்டம்

கூடலுார் :பெரியாறு அணை பிரச்னையில், கேரள அரசின் அடாவடியை கண்டித்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், கூடலுாரில் முற்றுகை போராட்டம் நடந்தது.

முல்லை பெரியாறு அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், பேபி அணையை பலப்படுத்தி நீர்மட்டம் 152 அடி தேக்கவும்; அணையின் நிர்வாக அதிகாரங்களை, தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


நடைபயணம்மேலும், தமிழக அரசின் அனுமதி இன்றி, தண்ணீர் திறக்கச் சென்ற கேரள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், கூடலுாரில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. கூடலுார் புது பஸ் ஸ்டாண்டில் நடந்த போராட்டம் காரணமாக, பஸ் போக்குவரத்து காலை 9:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.முற்றுகை போராட்டம் முடிவில், அங்கிருந்த விவசாயிகள் அனைவரும் குமுளி நோக்கி நடைபயணம் செல்லத் துவங்கினர்.போலீசார் அவர்களை தடுத்து, திருப்பி அனுப்பினர்.


அனுமதி ரத்துமுல்லை பெரியாறு அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்துவதற்கு இடைஞ்சலாக உள்ள மரங்களை வெட்டும் பிரச்னையில் அனுமதி, ரத்து என மாறி மாறி பேசுவது, நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுக்கும் கேரள அரசின் நாடகம் என விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


கிடப்பில் பணிகள்பேபி அணையை பலப்படுத்துவதற்கு, அதை சுற்றியுள்ள 15 மரங்களை வெட்ட வேண்டும். இதற்கு தமிழக பொதுப்பணித் துறையினர், மத்திய வன அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தனர்.வெட்டக்கூடிய மரங்களில் நம்பர் போட்டு, அதை போட்டோ எடுத்து அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த அப்போதைய தமிழக உதவி செயற்பொறியாளர் மீது, தங்கள் வனத்துறையின் அனுமதியின்றி பணிகளை செய்ததாக கேரளா வழக்கு தொடர்ந்தது. பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அணையை பலப்படுத்தி விட்டால் நீர்மட்டம் 152 தேக்க வாய்ப்பு ஏற்படும் என்பதால், கேரளா இவ்வாறு செய்வதாக அப்போதே புகார்கள் எழுந்தன.


ஸ்டாலின் கடிதம்இந்நிலையில், 15 மரங்களை வெட்ட நவ., 6ல் அனுமதி வழங்கியதற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.
ஆனால், மறுநாளே இந்த உத்தரவை ரத்து செய்வதாக கேரள அரசு கூறியது; வழக்கம்போல் கேரள அரசு நடத்தும் நாடகம் தான் என தமிழக விவசாயிகள் கொந்தளிக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
12-நவ-202123:57:30 IST Report Abuse
tata sumo kerala communist cm pinayle vijayan is no1 worst cm in india, see how they handle covid-19 in there state, more over 50 of cases comes from kerala shame on you communist.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
12-நவ-202122:29:10 IST Report Abuse
NicoleThomson டில்லியில் புரோக்கர்கள் ஆடிய ஆட்டத்துக்கு இங்கே கொதித்தெழுந்த மாபியா ஊடகங்கள் இப்போது மவுனமாய் இருப்பதும் , பியூஸ் , நித்தியானந்த ஜெயராமன் போன்ற இடை நிலை மக்களும் இப்போது என்ன செய்து கொண்டுள்ளனர்? வழக்கம்போல அவர்களின் அல்லக்கைகளும்?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
12-நவ-202110:29:18 IST Report Abuse
duruvasar தமிழக முதல்வரே தலைவணங்கி கேரளாவின் முடிவை ஏற்றுக்கொண்டுவிட்டார். விடியல் வரும் என நம்பிக்கையுடன் இருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X