தமிழ்நாடு

நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு முகாம்: ஒரு விரல் புரட்சி'க்கு ' இளம் படை' தயாரா?வாக்காளராக பதிவு செய்ய மறக்காதீங்க!

Updated : நவ 12, 2021 | Added : நவ 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு, திருப்பூர் மாவட்டத்தில், நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு முகாம் நடக்கிறது.நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மாவட்டம்தோறும் அதற்கான ஆயத்த பணிகள் நடந்துவருகின்றன.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. எட்டு
நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு முகாம்: ஒரு விரல் புரட்சி'க்கு ' இளம் படை' தயாரா?வாக்காளராக பதிவு செய்ய மறக்காதீங்க!

திருப்பூர்:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு, திருப்பூர் மாவட்டத்தில், நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு முகாம் நடக்கிறது.நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மாவட்டம்தோறும் அதற்கான ஆயத்த பணிகள் நடந்துவருகின்றன.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது.

எட்டு தொகுதிகளில், 2,512 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், 11 லட்சத்து, 68 ஆயிரத்து 682 ஆண்கள்; 11 லட்சத்து 97 ஆயிரத்து 236 பெண்கள்; 293 திருநங்கைகள் என, மொத்தம் 23 லட்சத்து 66 ஆயிரத்து 211 வாக்காளர் உள்ளனர்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்புமுகாம் நடைபெற உள்ளது. நாளை (13ம் தேதி), நாளை மறுநாள் (14ம் தேதி) மற்றும் வரும் 27, 28 ம் தேதிகளில், மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களிலும், காலை, 9:30 முதல் மாலை, 5:30 மணி வரை, சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்தாண்டு ஜன., 1ம் தேதியன்று 18 வயது பூர்த்தியானவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம், விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து வழங்கவேண்டும்.வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதோர், வாக்காளர் பட்டியல் பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்ய, முகாம் நாளில் விண்ணப்பிக்கலாம்.எந்தெந்த படிவம் எதற்கு?வாக்காளர் பட்டியில் புதிதாக பெயர்சேர்க்க, படிவம் 6 ; பெயர் நீக்கம் செய்ய படிவம் 7; பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய படிவம் 8; ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், புதிய குடியிருப்பு முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம் 8ஏ பூர்த்தி செய்து வழங்கவேண்டும்.
www.nvsp.in என்கிற இணையதளம் மூலமாகவும், Voter Helpline என்கிற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வரும் ஜன., மாதம், வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.சிறப்பு முகாம் நாளில், பொதுமக்கள், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி பதிவு அலுவலர்களை தொடர்புகொண்டு, தங்கள் கோரிக்கைகள் தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வினீத் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-நவ-202113:30:18 IST Report Abuse
சம்பத் குமார் 1). ஜனநாயக செழிக்க நாம் தேர்தல் அடையாள அட்டைகளை பெற வேண்டும். ஒட்டு போடுவது நமது தலையாய முதற்கடமையாகும்.2). இந்த முகாமை பயன்படுத்தி அதற்குண்டான வேலைகளை செய்து கொள்ள வேண்டும். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X