ஆக்கிரமிப்பு எல்லையில் கிராமம்: இந்தியா ஒருபோதும் ஏற்காது

Updated : நவ 12, 2021 | Added : நவ 12, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி :'அருணாச்சலில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்த எல்லைப்பகுதியில் கிராமத்தை கட்டும் சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. சீனாவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒரு போதும் ஏற்கவில்லை; நியாயப்படுத்தவும் இல்லை' என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு மாநிலமான அருணாச்சல் எல்லையை ஒட்டிய பகுதியில் அதி நவீன கிராமம் ஒன்றை சீனா
ஆக்கிரமிப்பு, எல்லை  கிராமம், இந்தியா , ஏற்காது

புதுடில்லி :'அருணாச்சலில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்த எல்லைப்பகுதியில் கிராமத்தை கட்டும் சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. சீனாவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒரு போதும் ஏற்கவில்லை; நியாயப்படுத்தவும் இல்லை' என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல் எல்லையை ஒட்டிய பகுதியில் அதி நவீன கிராமம் ஒன்றை சீனா கட்டி வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் இதுபற்றி வெளியுறவு அமைச்சக செயதி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: சீனா கடந்த 1962ல் அருணாச்சல் எல்லைப்பகுதியை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தது. அங்கே பல ஆண்டுகளாவே சீனா கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஏற்கவும் இல்லை; நியாயப்படுத்தவும் இல்லை. நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
12-நவ-202115:51:43 IST Report Abuse
M.COM.N.K.K. வாய்ச்சொல்லில் அனைவரும் வீரர்களே. ஆக்கிரமிப்பில் கிராமம் உருவாவதை தடுக்கமுடியவில்லை என்றால் இப்படிச்சொல்லி சமாளிக்க வேண்டியது தான். இப்படியே சொல்லிக்கொண்டு நாம் காலத்தை ஓட்டவேண்டியதுதான்.கிராமம் அமைவதை நாம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்.வேறென்ன சொல்ல
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-நவ-202106:29:36 IST Report Abuse
Kasimani Baskaran இந்தியாவுக்குச்சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்பது காலத்தின் கட்டாயம். அதில் முதல்க்கட்டமாக பாக்கிஸ்தான் வசமாக இருக்கும் பகுதிகளை மீட்க வேண்டும்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-நவ-202106:27:11 IST Report Abuse
Mani . V ஆமா, உள்ளே வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள். எல்லையில் கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X