அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: எதிர்ப்பைக் காட்ட நாகரிகமான வழிகள் இருக்கு!

Updated : நவ 12, 2021 | Added : நவ 12, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ- மெயில்' கடிதம்: வன்னியருக்கு தமிழக அரசு ஒதுக்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, பா.ம.க.,வினர் அரசுப் பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்து,
Ramadoss, Anbumani, Pattali Makkal Katchi, PMK


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ- மெயில்' கடிதம்: வன்னியருக்கு தமிழக அரசு ஒதுக்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, பா.ம.க.,வினர் அரசுப் பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்து, வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அராஜகச் செயலுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி ஆகியோர் எந்தவித கண்டனமோ, வருத்தமோ தெரிவிக்காமல் உள்ளனர். அவர்களின் மவுனம், பா.ம.க.,வினரின் அடாவடி செயலை ஆதரிப்பது போல உள்ளது. பொது மக்கள் சொத்தை சேதப்படுத்த, பா.ம.க.,வினருக்கு என்ன உரிமை உள்ளது?


latest tamil newsஉயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்யலாம்; அரசுடன் பேச்சு நடத்தலாம்; பேரணி, உண்ணாவிரதம் போன்ற போராட்டம் நடத்தி எதிர்ப்பைக் காட்டலாம். இப்படி எதிர்ப்பைக் காட்ட, நாகரிகமான முறையில் பல வழிகள் இருக்கையில், பொது சொத்தை சேதப்படுத்துவது என்பது காட்டுமிராண்டி செயல். பா.ம.க.,வினர் என்றாலே, மரங்களை வெட்டுவர், பேருந்தை உடைப்பர் என்ற அவப்பெயர், மக்களிடையே உள்ளது.

வன்முறையும், அராஜகமும் தான் தங்களது கட்சியின் பிரதான கொள்கையும், கோட்பாடும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர், பா.ம.க.,வினர். ராமதாஸ் நேர்மையானவராக இருந்தால், அவரது கட்சியினர் சேதப்படுத்திய அரசு பேருந்தின் நஷ்டத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
12-நவ-202120:00:36 IST Report Abuse
Krishnamurthy Venkatesan யாராக இருந்தாலும் வன்முறையை அனுமதிக்க கூடாது. அக்கட்சியின் தலைமைக்கு நோட்டிஸ் அனுப்பி பாருங்கள், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் எங்கள் கட்சி தொண்டர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்வார்கள்.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
12-நவ-202119:10:59 IST Report Abuse
Anantharaman Srinivasan இப்படி அராஜகம் பண்ணியே வளர்ந்த கட்சி. வேறென்னசெய்யும். அப்தான் அரசு செவிமடுக்கும் என நினைக்கிறார்கள். நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது வாலை ஆட்டிக்கொண்டு ...... தான் போகும்.
Rate this:
Nellai Ravi - Nellai,இந்தியா
13-நவ-202102:06:33 IST Report Abuse
Nellai Raviஇப்படி தானே திமுக வளர்ந்தது... தான் வளர திமுக மாதிரியே செயல் படுகிறார்கள்....
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
12-நவ-202117:54:17 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அநதக்கட்சியின் டிரேட்மார்க் மரம்வெட்டுவது, பால் கேனைக் கவிழ்ப்பது போன்ற செயல்கள்தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X