சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள்: டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரிக்கை

Updated : நவ 12, 2021 | Added : நவ 12, 2021 | கருத்துகள் (33) | |
Advertisement
சென்னை: டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை பாதிப்பில் இருந்து, மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர, காவல்துறையினர், பிற அரசு துறையினர், இரவு, பகல் பாராமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இத்தருணத்தில், சில சமூக விரோதிகள், சமூக வலைதளங்களை தங்களுக்கு
Sylendra Babu, DGP, Social Media

சென்னை: டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை பாதிப்பில் இருந்து, மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர, காவல்துறையினர், பிற அரசு துறையினர், இரவு, பகல் பாராமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இத்தருணத்தில், சில சமூக விரோதிகள், சமூக வலைதளங்களை தங்களுக்கு சாதகமாக்கி, மக்களிடையே, மழை, வெள்ளம் குறித்து அச்சத்தையும், பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில், காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் கருத்துகளை பகிர்ந்து, பொய் பிரசாரம் செய்கின்றனர். அரசு நிர்வாகத்திற்கு அவப்பெயர் உருவாக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக, சிலர் இதுபோன்ற அவதுறான கருத்துகளை திட்டமிட்டு பரப்பி வருவது சட்டப்படி குற்றம்.


latest tamil news


எனவே, இதுபோன்ற சமூக பொறுப்பின்றி, உண்மைக்கு புறம்பான இடுகைகளை பதிவிடுவோர், எவராயினும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களது சமூக வலைதள கணக்கும் முடக்கப்படும். இவ்வாறு சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (33)

DVRR - Kolkata,இந்தியா
12-நவ-202117:36:47 IST Report Abuse
DVRR மிக மிக வெளிப்படையாக சொல்கின்றார் திருட்டு திராவிட கட்சியை யாரேனும் அவமதித்தால் அவர்கள் மீது உடனே நடவடிக்கியா என்று ?????என்று மிக மிக தெளிவாக சொல்வது தெரிகின்றது
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
12-நவ-202116:48:11 IST Report Abuse
abibabegum எங்களுக்கு வந்த தக்கtளி சட்னி உனக்குவந்த ரத்தமா என்ன நியாயமோ
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
12-நவ-202115:18:59 IST Report Abuse
Kumar ஏரி,குளம் ,கண்மாய் உடைந்து வீட்டினுள் நீர் புகுந்தது.அதனால் மீன்களும் வீட்டினுள் புகுந்தன.மக்கள் மிக சந்தோசமாக மீன்களை பிடித்து விளையாடினர். நான்கு நாட்களாக‌ சென்னை முழுவதும் மீன் குழம்பும்,மீன் வறுவலும் தான். மக்கள் மீண்டும் மீன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர். அண்ணே இது அவதூறா? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X