வெளி மாநிலத்தினருக்கு வேலை; அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

Added : நவ 12, 2021 | கருத்துகள் (22) | |
Advertisement
மதுரை : மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க சட்டம் இயற்ற கோரிய வழக்கில், வெளி மாநிலத்தினர் எத்தனை பேர் இங்கு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என கேள்வி எழுப்பி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்சி, அரியமங்கலத்தை சேர்ந்த சோழசூரன் தாக்கல் செய்த பொதுநல மனு: கம்ப்யூட்டர் பொறியாளராக உள்ளேன். திருச்சி பொன்மலை
தமிழக அரசு, நோட்டீஸ், ஐகோர்ட்

மதுரை : மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க சட்டம் இயற்ற கோரிய வழக்கில், வெளி மாநிலத்தினர் எத்தனை பேர் இங்கு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என கேள்வி எழுப்பி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருச்சி, அரியமங்கலத்தை சேர்ந்த சோழசூரன் தாக்கல் செய்த பொதுநல மனு: கம்ப்யூட்டர் பொறியாளராக உள்ளேன். திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், தொழில் பழகுனர் பயிற்சிக்கு 165 தமிழர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது. வட மாநிலத்தினர் 1,600 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. புலம் பெயர்ந்தவர்களைவிட உள்ளூரைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் இயற்றியுள்ளன.


latest tamil news


மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க அரசாணை அல்லது சட்டம் இயற்றக் கோரி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, குறிப்பிட்டார்.



நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு, வெளி மாநிலத்தினர் எத்தனை பேர் தமிழகத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என கேள்வி எழுப்பி, மனுதாரர் தெளிவுபடுத்த அறிவுறுத்தினர். மேலும், தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலர், பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

DVRR - Kolkata,இந்தியா
12-நவ-202117:50:06 IST Report Abuse
DVRR நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா???அப்போ ஆந்திராவா தெலிங்கானாவை ??வெளிமாநிலம் நீதிபதியா ???
Rate this:
Cancel
A.Rangarajan - chennai,இந்தியா
12-நவ-202116:53:33 IST Report Abuse
A.Rangarajan Tamil nadu governments parties were providing everything free to our people. getting a man power is difficult. Tasmac is the major problem in tn. Hence all estalibshments prefer only other states employees But government cannot control and make law that tamilians only should be given employment in tamil nadu. Most of the tamilians were working in other states and throughout India.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
12-நவ-202113:45:40 IST Report Abuse
Sampath Kumar அய்யா பெல்லு இந்தியா முழுவதும் வேலை பார்க்கலாம் தான் அனா சட்டம் சோனு பிறகு எங்கே என்ன நடக்குது ?? அதுவும் பொது துறை நிலை மிக மோசம் குறிப்பிக்க தமிழ் நாட்டில் செய்யப்படும் காரியங்களி கவனித்தால் தெய்ரயும் ஓரு ரயில்வே கேட்டு மூடும் பணிக்கு கோடா தமிழன் தேர்வு செய்ய படவில்லை அதனை தரம் குறைந்தவன் தமிழன் உணமைத்ரி பிஜேபி சோம்பு எல்லாம் ஏன்டா பேச மாட்ட . தமிழ் நாட்டில் இருந்து கிட்டு தமிழ் விரத போக்கை கடை பிடிக்கும் உன் போன்ற யாரோக்கியனை தமிழர்கள் அடையாளம் கண்டு விட்டார்கள்
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
12-நவ-202117:52:14 IST Report Abuse
DVRRஅப்போ ரயில்வே கேட் கூட மூடத்தெரியாத டாஸ்மாக் நாட்டு "குடி" மக்களா??? அதுக்குக்கூட வெளி மாநிலம் என்றால் இப்படிதான் அர்த்தம் ஆகின்றது...
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
17-நவ-202103:42:08 IST Report Abuse
சாண்டில்யன்இந்த வழக்கே மிக காலந்தாழ்ந்த வழக்கு யாரோ ஒருவர் இப்போதானே என்ன பொகையுதுன்னு ஆரம்பிக்கறார் டில்லி அரசின் உள்நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் வட மாநிலத்தவரை பணியமர்த்தினால் காலப்போக்கில் இங்கேயே செட்டில் ஆவார்கள் 1960 களிலிருந்து ரயில்வேயில் பணியமர்த்தப்பட்ட கேரளத்துக்கு காரர்கள் பல லட்சம் குடும்பங்கள் இங்கே செட்டிலாகி தமிழ்நாட்டில் பலரும் தீவிர அய்யப்ப பக்தர்களாகி போனது தான் கண்டபலன் இப்படியே போனால் விரைவில் தமிழகம் ஒரு கலப்பட (பலபட்டறை) தேசமாகும் என்பதே டில்லியின் நோக்கம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X