சென்னை : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று முதல்வரை தொடர்பு கொண்டு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று காலை முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மாநில அரசு எடுத்துள்ள, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார். பின், தேசிய பேரிடர் மீட்பு படை இயக்குனர் பிரதானை தொடர்பு கொண்டார். தமிழகத்தில் கன மழையில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
![]()
|
'தேசிய பேரிடர் மீட்பு படை, 14 பட்டாலியன்களை நிலை நிறுத்தி உள்ளது. கூடுதல் படைகள் தயார் நிலையில் உள்ளன' என, அவர் தெரிவித்தார். தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு ஆதரவு அளித்து வருவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு, கவர்னர் நன்றி தெரிவித்துள்ளார்.